வெளிநாட்டினரும் வியக்கும் தமிழகம் | சென்னை செய்திகள் | Dinamalar
வெளிநாட்டினரும் வியக்கும் தமிழகம்
Added : ஆக 08, 2022 | |
Advertisement
 

சென்னை: சென்னை, மயிலாப்பூர், சி.ஐ.டி காலனி, கவிக்கோ மன்றத்தில், மன்னார்குடி, தேசிய பள்ளியை மையமாக கொண்டு , நூலாசிரியர் சமஸ் எழுதிய, 'ஒரு பள்ளி வாழ்க்கை' நுால் வெளியீட்டு விழா நேற்று நடந்தது.

தமிழக அரசின் திட்டக்குழு துணை தலைவரும் பொருளியலாளருமான ஜெயரஞ்சன், நுாலை வெளியிட, இல்லம் தேடி கல்வி இயக்க சிறப்பு அலுவலர் இளம் பகவத், முதல் பிரதியை பெற்றுக்கொண்டார். சிறப்பு விருந்தினர்களாக, கல்வியாளர் வசந்திதேவி, சேதுராமன் ஆகியோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியை மானா பாஸ்கரன் தொகுத்து வழங்கினார். கல்வியாளர் சேதுராமன், பதிப்பாளர்கள் ஜே.பி.ஆர்., செந்தில் முருகன் மற்றும் மன்னார்குடி தேசிய பள்ளி முன்னாள் மாணவர்கள் பங்கேற்றனர்.

வசந்தி தேவி நிகழ்ச்சியில் பேசும்போது, ''அதிகம் கட்டணம் வாங்கும் தனியார் பள்ளிகள் தான் தரம் உயர்ந்ததாக கருதுகிறோம். அந்த நிலை மாறி, அரசு பள்ளிகளை முன்னிறுத்த வேண்டும். தமிழகத்தில், கல்வியில் மிகப்பெரிய மாற்றம் வரும் என நம்புகிறோம்,'' என்றார். இளம் பகவத் பேசியதாவது:பள்ளி என்பது கட்டடம் இல்லை; அது நம் நினைவுகளின் இருப்பிடம். இந்நுால் எல்லாவற்றையும் சொல்லி இருக்கிறது.

இல்லம் தேடி கல்வி இயக்கத்தில், ஒன்றரை லட்சம் பேர் உள்ளனர். அவர்கள் எல்லாம், மாணவர்களுக்கு பாடம் எடுப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகின்றனர். வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள், இல்லம் தேடி கல்வி திட்டம் குறித்து ஆச்சர்யபடுகின்றனர். இது நமக்கு கிடைத்த வெற்றி.இவ்வாறு அவர் பேசினார்.


 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X