தி.மு.க.,வை விமர்சித்தவி.சி., நிர்வாகி 'சஸ்பெண்ட்' | விழுப்புரம் செய்திகள் | Dinamalar
தி.மு.க.,வை விமர்சித்தவி.சி., நிர்வாகி 'சஸ்பெண்ட்'
Added : ஆக 08, 2022 | |
Advertisement
 

'பஞ்சமி நிலத்தை அபகரிப்பது தான் திராவிட மாடலா?' என்ற வாசகத்துடன் விழுப்புரம் மாவட்டம் முழுதும் போஸ்டர் ஒட்டிய வி.சி., நிர்வாகி, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் தாலுகா, கீழ்எடையாளம் கிராமத்தில் அரக்கோணம் தி.மு.க., எம்.பி., ஜெகத்ரட்சகனின் கல்லுாரி கட்டும் பணி நடந்து வருகிறது.இந்த இடம் பஞ்சமி நிலம் என்றும், கல்லுாரி கட்ட எதிர்ப்பு தெரிவித்தும், வி.சி., கட்சி, மயிலம் சட்டசபை தொகுதி செயலர் செல்வசீமான், ஜூலை, 27ம் தேதி, கட்சி கொடி கட்டிய டிராக்டருடன் சென்று, கல்லுாரிக்கு எதிரிலுள்ள காலி இடத்தை உழுது, நிர்வாகிகளுடன் போராட்டம் நடத்தினார்.

மயிலம் போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் சமரசம் செய்து, அவர்களை அப்புறப்படுத்தினர்.இதற்கிடையில், கீழ்எடையாளம் இடம் பிரச்னை தொடர்பாக, வி.சி., தலைவர் திருமாவளவன் படத்துடன், விழுப்புரம் மாவட்டம் முழுதும் கண்டன போஸ்டர் ஒட்டப்பட்டது.அதில், 'பஞ்சமி நிலத்தை அபகரிப்பது தான் திராவிட மாடலா?' என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது. இதையடுத்து, செல்வசீமான் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X