கனிமொழி வீட்டில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை | சென்னை செய்திகள் | Dinamalar
கனிமொழி வீட்டில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை
Added : ஆக 08, 2022 | |
Advertisement
 

சென்னை: சென்னை சி.ஐ.டி., காலனியில் உள்ள, தி.மு.க., மகளிர் அணி செயலர் கனிமொழி வீட்டில், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் படத்திற்கு, முதல்வர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

கருணாநிதியின், 4வது ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி, சென்னை சி.ஐ.டி., காலனில் உள்ள கனிமொழி வீட்டில், கருணாநிதி படத்திற்கு, முதல்வர் மலர் துாவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, 500 மகளிருக்கு, நலத் திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிழ்ச்சியில், அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, தி.மு.க., பொருளாளர் டி.ஆர்.பாலு, இளைஞரணி செயலர் உதயநிதி ஆகியோர் பங்கேற்றனர்.சென்னை மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில், அவரது மனைவி ராஜாத்தி, கனிமொழி ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.



வைகோ மரியாதை



கருணாநிதி நினைவிடத்தில், ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ, துணை பொதுச்செயலர் மல்லை சத்யா, தலைமை நிலைய செயலர் துரை உள்ளிட்ட நிர்வாகிகள் மலர் துாவி மரியாதை செலுத்தினர்.சென்னை, சிந்தாதிரிப்பேட்டையில் திரைப்பட வினியோகஸ்தர்கள் சங்கம் சார்பில் நடந்த, இலவச மருத்துவ முகாமை, உதயநிதி துவக்கி வைத்தார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X