30 நாளில் கட்டட அனுமதி: உள்ளாட்சிகளில் அலட்சியம் | சென்னை செய்திகள் | Dinamalar
30 நாளில் கட்டட அனுமதி: உள்ளாட்சிகளில் அலட்சியம்
Added : ஆக 08, 2022 | |
Advertisement
 

சென்னை: குடியிருப்பு திட்டங்களுக்கு 30 நாட்களில் கட்டுமான ஒப்புதல் வழங்க வேண்டும் என்ற அரசு உத்தரவை உள்ளாட்சி அமைப்புகள் செயல்படுத்துவது இல்லை என்ற புகார் எழுந்துள்ளது.

தமிழகத்தில் பொது கட்டட விதிகள் 2019ல் அமலுக்கு வந்தன. இதில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களின் அடிப்படையில் 10 ஆயிரம் சதுர அடி வரையிலான குடியிருப்பு திட்டங்களுக்கு உள்ளாட்சி அமைப்புகளே அனுமதி வழங்கலாம். மாநகராட்சிகள் நகராட்சிகள் பேரூராட்சிகள் ஊராட்சி ஒன்றியங்களுக்கு இதற்கான அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் 'ஆன்லைன்' முறையில் விண்ணப்பங்கள் பெறுவது பரிசீலிப்பது போன்ற பணிகளுக்கான வசதியும் உள்ளது.

இந்த வசதிகளை பயன்படுத்தி கட்டுமான திட்டங்களுக்கு 30 நாட்களுக்குள் ஒப்புதல் வழங்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை பெரும்பாலான உள்ளாட்சி அமைப்புகள் கடைப்பிடிப்பதில்லை என்ற புகார் எழுந்துள்ளது.இது குறித்து நகர் ஊரமைப்பு துறையான டி.டி.சி.பி. அதிகாரிகள் கூறியதாவது:உள்ளாட்சி அமைப்புகளுக்கு தனி இணையதள வசதி ஏற்படுத்தப்பட்ட பின்னும் பெரும்பாலான இடங்களில் 'மேனுவல்' முறையில் விண்ணப்பங்கள் கட்டணங்கள் பெறப்படுகின்றன.

இதனால் மேலதிகாரிகளால் கண்காணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.உள்ளூர் அரசியல் பிரமுகர்கள் தலையீடு அதிகரிப்பு காரணமாக உளளாட்சிகளில் 'ஆன்லைன்' முறையில் விண்ணப்பங்கள் பெறுவது பாதிக்கப்பட்டு உள்ளது. மேலும் உள்ளூர் அரசியல் பிரமுகர்கள் சொல்லும் கோப்புகளுக்கு மட்டுமே ஒப்புதல் கிடைக்கும் சூழல் நிலவுகிறது.உரிய வசதிகளை ஏற்படுத்தி கொடுத்த பின்னும் உள்ளாட்சி அமைப்புகள் கட்டட அனுமதி கோப்புகளை முடிப்பதில் ஆறு மாதம் முதல் ஒரு ஆண்டு வரை தாமதம் செய்கின்றன. இது குறித்து நகராட்சி நிர்வாகத் துறையிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. நகராட்சி நிர்வாக இயக்குனரின் நடவடிக்கைக்காக காத்திருக்கிறோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X