எண்ணுார் விரிவாக்க மின் நிலையம் மீண்டும் துவங்குமா கட்டுமான பணி
Added : ஆக 08, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 

சென்னை: எண்ணுார் விரிவாக்க மின் நிலைய கட்டுமானத்தை மேற்கொள்ள ஆணை வழங்கி, நான்கு மாதங்களாகியும், இதுவரை ஒப்பந்த நிறுவனம் பணியை துவக்காததால், மின் வாரியம், கண்காணிப்பு குழு அமைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

தமிழக மின் வாரியம், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள எண்ணுாரில், 660 மெகா வாட் திறனில், 'எண்ணுார் விரிவாக்கம்' என்ற பெயரில், அனல் மின் நிலையம் அமைக்கும் பணியை, 2014ல் துவக்கியது. இதன் கட்டுமான பணிகளை, 'லேன்கோ' என்ற தனியார் நிறுவனம் மேற்கொண்டது. அங்கு, 2018ல் மின் உற்பத்தி துவக்க திட்டமிடப்பட்டது. திட்ட செலவு, 3,921 கோடி ரூபாய்.ஒப்பந்த நிறுவனத்தின் அலட்சியத்தால் கட்டுமான பணிகள் மந்தகதியில் நடந்தன; மின் வாரிய அதிகாரிகளும் கண்டுகொள்ளவில்லை.

லேன்கோ நிறுவனம், நிதி நெருக்கடியில் சிக்கியதால், 2017ல், எண்ணுார் மின் நிலைய பணிகள் முடங்கின. மொத்த பணியில், 17 சதவீதம் மட்டுமே முடிவடைந்திருந்தன.பின், எஞ்சிய பணிகளை தொடர, புதிய நிறுவனத்தை தேர்வு செய்ய, 2018ல் 'டெண்டர்' கோரப்பட்டது. அதில் மத்திய அரசின் பி.எச்.இ.எல்., நிறுவனமும், ஒரு தனியார் நிறுவனமும் பங்கேற்றன.டெண்டரில் தனியார் நிறுவனம் தேர்வாகியது. திட்ட செலவு, 4,442 கோடி ரூபாய். அந்த நிறுவனம் வங்கி வைப்பு தொகையை செலுத்தாததால், 2021 ஏப்ரலில் ஒப்புதல் ரத்து செய்யப்பட்டது.

பின், ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.இதையடுத்து, ஒப்புதல் கடிதம் ரத்து செய்யப்பட்ட நிறுவனத்திற்கே, எண்ணுார் விரிவாக்க மின் நிலைய கட்டுமான மேற்கொள்ள ஒப்பந்த ஆணை, இந்தாண்டு மார்ச் 9ல் வழங்கப்பட்டது. ஆணை வழங்கி நான்கு மாதங்கள் முடிவடைந்த நிலையில், இன்னும் எந்தவித கட்டுமான பணிகளும் துவங்கப்படவில்லை.இதனால், மின் நிலைய பணிகளை முடிக்க, மேலும் காலதாமதமும் செலவும் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.இதுகுறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:ஒப்பந்தப்படி அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள், மின் நிலைய கட்டுமான பணிகளை முடிக்க வேண்டும்.

ஆனால், இன்னும் முடங்கியுள்ள பணிகளை துவங்கப்படவில்லை. குறிப்பாக, கட்டுமான பணிக்காக, உயரழுத்த பிரிவில் மின் இணைப்பு கூட பெறப்படவில்லை.எனவே, குறிப்பிட்ட காலத்திற்குள் பணிகளை முடிப்பதை உறுதி செய்ய, உயரதிகாரிகள் தலைமையில் கண்காணிப்பு குழு நியமிக்க வேண்டும். அக்குழு வாரம்தோறும் பணிகளின் நிலையை ஆய்வு செய்தால் தான் திட்டமிட்டபடி, எண்ணுார் மின் நிலையம் வரும்.இவ்வாறு அவர் கூறினார்.


 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X