இருளர் பெண்கள் தொழில் துவங்கரூ. 1.06  கோடி நிதி வழங்கல் | செங்கல்பட்டு செய்திகள் | Dinamalar
இருளர் பெண்கள் தொழில் துவங்கரூ. 1.06  கோடி நிதி வழங்கல்
Added : ஆக 09, 2022 | |
Advertisement
 



செங்கல்பட்டு ; செங்கல்பட்டு மாவட்ட மக்கள் குறைதீர் கூட்டம், கலெக்டர் ராகுல்நாத் தலைமையில், செங்கல்பட்டில் நேற்று நடந்தது.மாவட்ட வருவாய் அலுவலர் மேனுவல்ராஜ், பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் லலிதா, ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் சுந்தரம் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.கூட்டத்தில், முதியோர் உதவித்தொகை, வேலைவாய்ப்பு, சாலை, குடிநீர், வீட்டுமனை பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய, 259 மனுக்கள் வரப்பெற்றன.

இந்த மனுக்கள், சம்பந்தப்பட்டத் துறை அதிகாரிகளிடம் கொடுத்து நடவடிக்கை எடுக்க, கலெக்டர் உத்தரவிட்டார்.தொடர்ந்து, மாவட்டத்தில் உள்ள, பழங்குடியினர் நல பெண்கள் முன்னேற்றத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்தார்.இருளர் பழங்குடியினர் பெண்கள், 50 பேர், புறக்கடை கோழி வளர்ப்பு 42.4 லட்சம் ரூபாய்; சானிடரி நாப்கின் தொழிலுக்கு, ஒரு குழுவிற்கு 32.5 லட்சம் ரூபாய், மரக்செக்கு எண்ணெய் தொழில் செய்ய ஒரு குழுவிற்கு, 12.21 லட்சம் ரூபாய் வழங்கினார்.பசுமை கூடம் நாற்றங்கால் அமைக்க ஒரு குழுவிற்கு 19.98 லட்சம் ரூபாய் என, மொத்தம் 1.06 கோடி ரூபாயில், தொழில் துவங்க நிதி வழங்கினார்.

தீக்குளிக்க முயற்சி
செய்யூர் அடுத்த, வீரபோகம் கிராமத்தைச் சேர்ந்த சொக்கலிங்கம் மனைவி கல்யாணி, 70. குறைதீர் கூட்டத்தில் பேத்தியுடன் மனு அளிக்க வந்தவர், பையிலிருந்த மண்ணெண்ணெயை தன் உடலில் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். அங்கு, பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், மூதாட்டியை மீட்டு, அவர் மீது தண்ணீர் ஊற்றினர்.மூதாட்டி கல்யாணிக்கு, வீரபோகம் கிராமத்தில், சொந்தமாக 8 சென்ட் நிலம் உள்ளது. தன் மகன் வழிபேரனான ஞானசேர் என்பவர், வி.ஏ.ஓ., உதவியுடன் அந்த இடத்திற்கான பட்டாவை மாற்றம் செய்துள்ளார்.சம்பந்தப்பட்ட நிலத்தை விற்பனை செய்ய முயற்சித்தபோது, உண்மை தெரியவந்தது. நிலத்தை மீட்டு தர, கலெக்டரிடம் கோரிக்கை விடுத்தார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X