ரூ.36 லட்சம் இரும்பு திருட்டு; 3 பேர் கைது: 2 லாரி பறிமுதல்
Added : ஆக 09, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 



கடலூர், : தனியார் கம்பெனியில் திருடிய இரும்பு பொருட்களை ஏற்றிச்சென்ற, இரண்டு லாரிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மூன்று பேரை கைது செய்தனர்.கடலுார் மாவட்டம் பெரியக்குப்பம் பகுதியில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் துவங்குவதற்கு, நாகார்ஜூனா ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் முடிவு செய்தது. அதற்காக 20 ஆண்டுகளுக்கு முன் 2,000 ஏக்கர் இடம் கையகப்படுத்தப்பட்டு கட்டுமான பணிகள் நடந்தது.

கடந்த 2011 ம் ஆண்டு வீசிய, தானே புயல் காரணமாக கட்டுமான பணிகள் சேதமடைந்தன.இதையடுத்து பணிகள் கிடப்பில் போடப்பட்டது. கட்டுமான பணிக்காக எடுத்துவரப்பட்ட, இரும்பு தளவாட பொருட்கள் மற்றும் காப்பர் கம்பிகள், கம்பெனி வளாகத்தில் திறந்தவெளியில் கிடக்கிறது. இதனை சுற்றுப்பகுதிகளைச் சேர்ந்தவர்கள் திருடிச்சென்றனர்.இதனால் இரும்பு பொருட்களை லாரிகளில் ஏற்றிச்சென்று, குடோனில் வைத்து வருகின்றனர்.

இந்நிலையில் இரண்டு டாரஸ் லாரிகளில், கம்பெனியின் அனுமதியின்றி இரும்பு பொருட்களை ஏற்றிச் சென்றது தெரிந்தது.இது குறித்த புகாரின்பேரில் புதுச்சத்திரம் இன்ஸ்பெக்டர் வினதா வழக்கு பதிந்து, நாமக்கல் மாவட்டம் படத்தான்குட்டையைச் சேர்ந்த சின்னதம்பி, 42, நாகை மாவட்டம் ஈசனுார் கட்டளையைச் சேர்ந்த பவுல்ராஜ், 45; ஆண்டார்முள்ளிபள்ளத்தைச் சேர்ந்த சுகதேவ், 24; மூவரையும் கைது செய்தனர். அதோடு 36 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 120 டன் இரும்பு பொருட்கள் மற்றும் இரண்டு லாரிகளை பறிமுதல் செய்தனர்.


 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X