பி.ஏ., தமிழுக்கு குவியும் விண்ணப்பங்கள்; அரசு போட்டி தேர்வுகளால் கிராக்கி
Updated : ஆக 09, 2022 | Added : ஆக 09, 2022 | கருத்துகள் (7) | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Latest district News

சிவகங்கை : டி.என்.பி.எஸ்.சி., மற்றும் போலீஸ் தேர்வுகளில், தமிழ் பாடத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதால், அரசு கல்லுாரிகளில் பி.ஏ., தமிழ், மொழியியல் வகுப்புகளில் சேர மாணவர்களிடத்தில் ஆர்வம் அதிகரித்துள்ளது.



தமிழகத்தில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளில் இளங்கலை பட்டப்படிப்பில் மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங் நடைபெற்று வருகிறது. சிறப்பு பிரிவு, கலை, அறிவியல் பிரிவுகளுக்கென தனித்தனியாக முதற்கட்ட மற்றும் இரண்டாம் கட்ட கவுன்சிலிங் நடைபெற்று வருகிறது.டி.என்.பி.எஸ்.சி., குரூப் 1, 2 மற்றும் 4 ஆகிய தேர்வுகளில் அதிக பட்சமாக தமிழ் பாடத்தில் இருந்து வினாக்கள் இடம் பெறுகின்றன.





அதற்கு பின், பொது அறிவு, வரலாறு, கணிதம், அறிவியல் போன்ற பாடங்களில் இருந்து வினாக்கள் இடம் பெறுகின்றன. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்விலும், தமிழ் மற்றும் கொள்குறிவகை தேர்வு நடத்துகின்றனர். அதில், தமிழ் தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தால் மட்டுமே அடுத்த தேர்வுக்கான விடைகள் திருத்தப்படும் என்பது நடைமுறை.

இதனால் இளங்கலை மற்றும் முதுகலை பட்டம் முடித்து அரசு நடத்தும் போட்டி தேர்வுகளில் வெற்றி பெற்று ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., துணை கலெக்டர், டி.எஸ்.பி., பதவிகளை பெற இன்றைய இளைஞர்களிடத்தில் ஆர்வம் அதிகரித்துள்ளது.இதன் காரணமாகவே அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளில் பெரும்பாலும் பி.ஏ., தமிழ் மற்றும் பி.ஏ., மொழியியல் பாடப்பிரிவுகளை தேர்வு செய்கின்றனர்.



தமிழுக்கு அதிகம்

அரசு கல்லுாரி முதல்வர் ஒருவர் கூறியதாவது:ஒரு கல்லுாரிக்கு இளங்கலை பட்டப்படிப்பிற்காக குறைந்தது, 3,500 விண்ணப்பங்கள் வந்துள்ளன. அதில், 1,500 விண்ணப்பதாரர்கள் பி.ஏ., தமிழ் பாட பிரிவில் சேர விரும்புகின்றனர்.தமிழுக்கு அடுத்து தான், கம்ப்யூட்டர் சயின்ஸ், வேதியியல், வணிகவியல் போன்ற பாடப்பிரிவுகளில் சேர ஆர்வம் காட்டுகின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.




 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (7)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
09-ஆக-202212:11:23 IST Report Abuse
இ.வா தமிழ் சொல்லிக்கொடுக்கும் திறமையான ஆசியர்களை முதலில் கண்டு பிடித்து அவர்களை வேலைக்கு சேர்த்து பின்னர் இந்த தமிழ் படிக்கும் மாணவர்களுக்கு கற்பியுங்கள்
Rate this:
Cancel
raja - Cotonou,பெனின்
09-ஆக-202211:11:36 IST Report Abuse
raja என்னத்தான் போட்டி தேர்வு வைத்தாலும் தாழ்த்த பட்ட மற்றும் பழங்குடியினத்தவரை தவிர்த்து மற்ற அனைவரும் கையூட்டு கொடுத்தால் தான் திராவிடர்களின் ஆட்சியில் வேலை கிடைக்கும்.....
Rate this:
Cancel
CBE CTZN - Coimbatore,இந்தியா
09-ஆக-202210:31:30 IST Report Abuse
CBE CTZN மகிழ்ச்சி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X