ஹிந்தி விவகாரத்தில் தி.மு.க.,வினர் சமரசம்: பா.ஜ., எம்.எல்.ஏ., வானதி காட்டம்
Updated : ஆக 09, 2022 | Added : ஆக 09, 2022 | கருத்துகள் (87) | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 

கோவை: ''ஹிந்தி விவகாரத்தில் தி.மு.க.,வினர் தங்களுடைய குடும்பநலன், வியாபாரம் என்று வரும்போது சமரசம் செய்து கொள்கின்றனர்,'' என, பா.ஜ., தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் கூறினார்.



latest tamil news



கோவை மாவட்ட பா.ஜ., சார்பில், 75வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, தெற்கு தொகுதிக்குட்பட்ட ரங்கே கவுடர் வீதி, இடையர் வீதி பகுதிகளில் உள்ள வீடுகள், கடைகளுக்கு தேசிய கொடி வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. தொகுதி எம்.எல்.ஏ.,வும், பா.ஜ., தேசிய மகளிர் அணி தலைவியுமான வானதி சீனிவாசன் தேசிய கொடிகளை வழங்கினார்.பின்னர், அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

நாட்டு மக்கள், 75வது சுதந்திர தினத்தை திருவிழா போல் கொண்டாட வேண்டும் என, பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இதையடுத்து அனைத்து கட்சி நிர்வாகிகளும் இதற்கான விழிப்புணர்வு நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர்.தி.மு.க.,வினர் அரசு பள்ளி குழந்தைகள் ஹிந்தி கற்றுக்கொள்வதை எதிர்க்கின்றனர். ஆனால், வியாபாரம் என வரும் போது, ஹிந்தி திரைப்படங்களை வெளியிடுவது, ஹிந்தி சினிமா நிகழ்ச்சிகளில் பங்கேற்பது என, அவர்களது தனிப்பட்ட குடும்ப லாபத்துக்காக சமரசம் செய்துகொள்கின்றனர்.






தமிழகத்தில் ஏழை, எளிய குழந்தைகளை இன்னொரு மொழி கற்க எதிர்க்கின்றனர். புதிய கல்விக் கொள்கையை ஒவ்வொருவரும் தாய் மொழியில் கற்றுக்கொள்ள வேண்டும் என பிரதமர் மோடி கூறுகிறார். அந்தக் கொள்கையை தான் தி.மு.க., எதிர்கிறது. நாங்கள் தமிழகத்தில் மும்மொழி கல்விக் கொள்கையை அனுமதிக்க வேண்டும் என கூறி வருகிறோம்.
இவ்வாறு, அவர் கூறினார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (87)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
DOSS - புதுச்செரி,இந்தியா
09-ஆக-202219:15:35 IST Report Abuse
DOSS ஆயிரக்கணக்கான கிராமப்புற மாணவர்களின் வாழ்க்கையை சிறடித்துவிட்டு நவோதயம் வேண்டாம் என்று அழித்துவிட்டு திடியிரென ஞானோதயம்.
Rate this:
Cancel
Balaji - chennai,இந்தியா
09-ஆக-202219:00:54 IST Report Abuse
Balaji வானதி மேடம் புதிய கல்வி கொள்கை என்பது தவறான வார்த்தை. தேசிய கல்வி கொள்கை. பிஜேபி புதியதாக கல்வி கொள்கை எடுத்து வரவில்லை. இருக்கும் பழைய தேசிய கல்வி கொள்கையை அடுத்து வரும் சந்ததிக்கு உதவும் வகையில் மாற்றி இருக்கிறார்கள்
Rate this:
Cancel
venugopal s -  ( Posted via: Dinamalar Android App )
09-ஆக-202218:56:43 IST Report Abuse
venugopal s நீங்கள் என்ன சொன்னாலும் நாங்கள் பாஜகவை நம்பப் போவதில்லை. உங்களைவிட மோசமான திமுகவே பரவாயில்லை என்று தான் திமுகவுக்கு ஆதரவு கொடுக்கிறோம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X