'கோவையில் விமானங்களின் எண்ணிக்கை குறைகிறது'
Updated : ஆக 09, 2022 | Added : ஆக 09, 2022 | கருத்துகள் (5) | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 

கோவை: பயணிகள் எண்ணிக்கை குறைவு எதிரொலியாக, கோவையில் இருந்து இயக்கப்படும் விமானங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.



latest tamil news



கோவை சர்வதேச விமானநிலையத்தில் இருந்து வெளிநாட்டு போக்குவரத்து பிரிவில் சார்ஜா, சிங்கப்பூருக்கும் உள்நாட்டு போக்குவரத்து பிரிவில் சென்னை, டெல்லி, மும்பை, ஐதராபாத், பூனே, பெங்களூரு உட்பட பல்வேறு நகரங்களுக்கு, விமான சேவை வழங்கப்பட்டு வருகிறது.

கடந்த மாதம் வரை, 28 விமானங்கள் வரை இயக்கப்பட்டன. இந்நிலையில், உள்நாட்டு போக்குவரத்து பிரிவில் பயணிகள் எண்ணிக்கை குறைந்துள்ளதால் விமானங்களின் எண்ணிக்கையும், 23 ஆக குறைந்துள்ளது.

விமானநிலைய இயக்குனர் செந்தில்வளவன் கூறுகையில், ''கோவை சர்வதேச விமானநிலையத்தில் இருந்து சார்ஜா, சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கான விமானங்களில், பயணிகள் அதிகம் செல்வதால், டிக்கெட் கிடைப்பதே அரிதாக உள்ளது. அதேநேரம், உள்நாட்டு போக்குவரத்து பிரிவில், இயக்கப்படும் விமான சேவை அடிக்கடி ரத்து செய்யப்படுகின்றன. சில விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. இதற்கு முக்கிய காரணம், போதிய எண்ணிக்கையில் பயணிகள் இல்லாததுதான் என, அந்நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. இனி வரும் நாட்களில், நிறுத்தப்பட்டுள்ள விமான சேவை மீண்டும் துவங்கும் என நம்புகிறோம்,'' என்றார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (5)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Muthuraj Richard - Coimbatore,இந்தியா
09-ஆக-202217:14:21 IST Report Abuse
Muthuraj Richard ஐநூறு ஆயிரம் ருபாய் நோட்டுக்கள் தடை செய்யப்பட்டதிலிருந்து, சிறு, குறு, நடுத்தர தொழில்கள் மிகவும் பாதிக்கப்பட்டிருப்பது வெளிப்படையாக தெரிந்ததே, ஜி எஸ் டி ஒருபுறம், மூலப்பொருட்கள் விலை உயர்வு, தொழிலார் பற்றாக்குறை எல்லாம் கோவையை ஆட்டிப்படைக்கிறது, ஹோட்டல் துறை நிலைமை அதற்க்குமேல் மோசமாக உள்ளது, புதிய நிறுவனங்கள் தொழில் தொடங்க வராதது, (தற்போது உள்ளூர்வாசிகளால் நடத்தப்படும் சில பெரிய நிறுவனங்கள் வேறு யாரையும் வர விடாமல் தடுக்கிறார்களா????) ஸ்மார்ட் சிட்டி என அறிவித்தபிறகு ஏற்பட்ட உட்கட்டமைப்பு சீரழிவு வேறு, குறைந்தபட்சம் போக்குவரத்துக்கே நிறைந்து நெரிசலை உண்டாக்கும் சாலைகள், மருத்துவமனைகளின் கட்டணக்கொள்ளை, சில கல்வி நிறுவனங்களின் கட்டண கொள்ளை எல்லாம் தான் கோவையின் இந்நிலைக்கு காரணம்.
Rate this:
Cancel
T.SRINIVASAN - GUDUVANCHERI,இந்தியா
09-ஆக-202216:20:38 IST Report Abuse
T.SRINIVASAN முன்பைவிட இப்போது விமான பயணச்சீட்டு விலை இரண்டு மடங்காக அதிகரித்து விட்டது.
Rate this:
Cancel
Girija - Chennai,இந்தியா
09-ஆக-202210:09:20 IST Report Abuse
Girija இது எதனை உணர்த்துகிறது? கோவையில் தொழில் தொடங்க பிற மாநிலத்தவர் விரும்வில்லை என்று. அதிக வரி, அதிக லஞ்சம், கட்ட பஞ்சாயத்து, உள்ளூர் தொழிலாளிகளின் அதிக கூலி, டாஸ்மாக், ரௌடிகளின் அட்டகாசம், விலைவாசி பிற மாவட்டங்களைவிட கோவையில் அதிகம், கொலை, கொள்ளை, கம்யூனிஸ்ட்கள் அடாவடி போன்றவை காரணம். தினமும் உடன் பிறப்புகளும், உண்டியல் கட்சிகளும் எதாவது ஒரு காரணத்திற்காக நோட்டு புத்தகம், உண்டியலுடன் வியாபாரிகளிடம் வசூல் வேட்டை, அலுவலகத்தில் பணிபுரியும் மிடில் கிளாஸ் சிடம் எதாவது ஒரு காரணத்திற்காக வாகன பைன் என்ற பெயரில் லஞ்சம், கோவையில் இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் இத்தகு பயந்து சந்து, பொந்து வழியாக திருடர்களை போல் பயணிக்கும் அவலம், பத்தாயிரம் ஆண்டு வருவாய் உள்ள வீட்டிற்கு ஆண்டு வரி ரூ 3500, இதை தவிர தண்ணீர் வரி, குப்பை வரி அடுத்து மின்கட்டண உயர்வு ....... விட்டால் போதும் என்று கோவைக்கு குடி பெயர்ந்தோர் கோவையை விட்டே ஓடுகின்றனர்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X