சென்னை சுயேச்சை  கவுன்சிலர் தமிழக பா.ஜ.,வில் இணைப்பு | சென்னை செய்திகள் | Dinamalar
சென்னை சுயேச்சை  கவுன்சிலர் தமிழக பா.ஜ.,வில் இணைப்பு
Added : ஆக 09, 2022 | |
Advertisement
 

சென்னை: சென்னை மாநகராட்சி, 198வது வார்டு சுயேச்சை கவுன்சிலர் லியோ சுந்தரம், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை முன்னிலையில், நேற்று அக்கட்சியில் இணைந்தார்.

தமிழகத்தில் பிப்ரவரியில் நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், சென்னை மாநகராட்சியின், 198வது வார்டில் சுயேச்சையாக போட்டியிட்டு லியோ சுந்தரம் என்பவர் வெற்றிபெற்றார். அவர், நேற்று தன் ஆதராவளர்களுடன், தி.நகரில் உள்ள கமலாலயத்தில், பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை முன்னிலையில், கட்சியில் இணைந்தார். லியோ சுந்தரத்திற்கு, பா.ஜ.,வின் உறுப்பினர் அட்டையை அண்ணாமலை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் தமிழக பா.ஜ., துணை தலைவர் கரு.நாகராஜன், மாவட்ட தலைவர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.சென்னை மாநகராட்சியின், 134வது வார்டு கவுன்சிலராக பா.ஜ.,வை சேர்ந்த உமா ஆனந்தன் உள்ளார். இதையடுத்து, சென்னை மாநகராட்சியில் பா.ஜ., கவுன்சிலர்கள் எண்ணிக்கை இரண்டாக அதிகரித்துள்ளது.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X