'ஸ்போக்கன் இங்கிலீஷ்' வகுப்பு; விரைவில் தேதி அறிவிப்பு
Added : ஆக 09, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 

கோவை: தமிழகத்தில் நான்கு முதல், 9 வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு 'ஸ்போக்கன் இங்கிலீஷ்' வகுப்புக்கான அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.

கொரோனா காரணமாக ஒன்றரை ஆண்டுகளாக பள்ளிகள் செயல்படவில்லை. இதனால், கற்றல் இடைவெளியை குறைக்க பல்வேறு ஆக்கப்பூர்வ முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நான்கு முதல், 9 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 'ஸ்போக்கன் இங்கிலீஷ்' வகுப்பு நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டது.

முதல் பருவத்துக்கான பாடத்திட்ட தயாரிப்பில் தாமதம் ஏற்பட்டதால் இவ்வகுப்பு குறித்து தகவல் வெளியிடவில்லை.இரண்டாம் பருவ பாடப்புத்தகங்கள் வினியோகிக்கும் போது, ஸ்போக்கன் இங்கிலீஷ் வகுப்புக்கான அறிவிப்பும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக, மாநில அளவிலான கருத்தாளர்கள் பயிற்சி சமீபத்தில் நடந்தது. வகுப்பு வாரியாக, எளிமையான முறையில் மாணவர்களுக்கு, ஆங்கில உரையாடல் துவங்குவது குறித்து விவாதிக்கப்பட்டதோடு, அதற்கான வீடியோக்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன.

பாடத்திட்ட குழு முதன்மை கருத்தாளர் விஜயக்குமார் கூறுகையில்,''மாநில கல்வியியல் பயிற்சி ஆராய்ச்சி நிறுவனம் சார்பில், 'ஸ்போக்கன் இங்கிலீஷ் சிலபஸ்' உருவாக்கப்பட்டு வருகிறது. பணிகள் முடிவடையும் தருவாயில் இருப்பதால், இரண்டாம் பருவம் துவங்கும் போது, TNTP(TamilNadu Teachers platform) இணையதளத்தில் வீடியோக்கள் வெளியிடப்படும். ஆசிரியர்கள் மட்டுமே இதை பதிவிறக்கிக்கொள்ள பிரத்யேக கடவு எண் அளிக்கப்பட்டுள்ளது. அக்., மாதம் முதல் மாணவர்களுக்கு இவ்வகுப்புகள் நடத்தப்படும்,'' என்றார்.


 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X