கைத்தறி நெசவாளர் விருது பரிசுத் தொகை உயர்வு | சென்னை செய்திகள் | Dinamalar
கைத்தறி நெசவாளர் விருது பரிசுத் தொகை உயர்வு
Added : ஆக 09, 2022 | |
Advertisement
 

சென்னை: சிறந்த பட்டு மற்றும் பருத்தி நெசவாளர்களுக்கான பரிசுத் தொகை உயர்த்தப்பட்டு உள்ளது.பட்டு ரகத்திற்கான சிறந்த கைத்தறி நெசவாளர் விருது மற்றும் பருத்தி ரகத்திற்கான விருதுக்கான முதல் பரிசு ஒரு லட்சம் ரூபாயில் இருந்து, ஐந்து லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளது.

இரண்டாம் பரிசு 75 ஆயிரம் ரூபாயில் இருந்து 3 லட்சம் ரூபாயாகவும், மூன்றாம் பரிசு 50 ஆயிரம் ரூபாயில் இருந்து, 2 லட்சம் ரூபாயாகவும் உயர்த்தப்பட்டு உள்ளது.பட்டு ரகத்திற்கான முதல் பரிசுக்கு, திருபுவனம் முருகன், இரண்டாம் பரிசுக்கு காஞ்சிபுரம் ஞானசுந்தரி, மூன்றாம் பரிசுக்கு ஆரணி இளங்கோ ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

பருத்தி ரகத்திற்கான விருதுக்கான முதல் பரிசுக்கு, மகாகவி பாரதியார் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க உறுப்பினர் சரவணன், இரண்டாம் பரிசுக்கு சிவசக்தி கூட்டுறவு சங்க உறுப்பினர் பாலன், மூன்றாம் பரிசுக்கு மோதிலால் நேரு கூட்டுறவு சங்க உறுப்பினர் சந்திரலேகா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

இவர்கள் ஆறு பேர் பரிசுக்கான காசோலைகளை, முதல்வர் ஸ்டாலின் நேற்று வழங்கினார். கைத்தறி துறை அமைச்சர் காந்தி, தலைமை செயலர் இறையன்பு, கதர் துறை செயலர் தர்மேந்திர பிரதாப் யாதவ், கைத்தறி துறை கமிஷனர் ராஜேஷ் பங்கேற்றனர்.


 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X