திருத்தணி தி.மு.க., பிரமுகர் பழிக்குப்பழியாக கொலை:3 இளைஞர்கள் கைது
Added : ஆக 10, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Latest district News

திருத்தணி:திருத்தணி அருகே, 10 ஆண்டு பகை, பழிக்குப்பழியாக தி.மு.க., பிரமுகர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.


திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி, ஜெ.ஜெ., நகரைச் சேர்ந்தவர் மோகன், 35; தி.மு.க., பிரமுகர். இவர், நேற்று முன்தினம் இரவு 10:30 மணிக்கு, அரக்கோணத்தில் இருந்து, 'டி.வி.எஸ்., ஜூபிட்டர்' இருசக்கர வாகனத்தில், வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். வீட்டின் அருகே வந்தபோது, இளைஞர்கள் மூவர் மோகனை தடுத்து நிறுத்தி, சரமாரியாக கத்தியால் வெட்டி தப்பினர்.
பகுதிமக்கள் மோகனை மீட்டு, திருத்தணி அரசு மருத்துவமனையில் அழைத்து சென்றனர். அங்கு மருத்துவ பரிசோதனையில் அவர் இறந்தது தெரியவந்தது.திருத்தணி டி.எஸ்.பி., விக்னேஷ் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் ஏழுமலை, எஸ்.பி., தனிப்படை எஸ்.ஐ.,குமார் ஆகியோர் தலைமையில் இரண்டு தனிப்படைகள் அமைத்து தப்பியோடிய இளைஞர்களை தேடி வந்தனர். சென்னை, வியாசர்பாடியில் பதுங்கியிருந்த இரண்டு இளைஞர்களும், திருத்தணி, பெரியார் நகரில் ஒருவரும் சிக்கினர்.தொடர் விசாரணையில், பிடிபட்டவர்கள் திருத்தணியைச் சேர்ந்த சஞ்சய், 23, விக்னேஷ், 22, வியாசர்பாடியைச் சேர்ந்த ரித்திஷ், 18, என்பது தெரிய வந்தது.போலீசாரின் விசாரணையில் தெரியவந்ததாவது:

சஞ்சையின் சித்தப்பா சிவா என்பவரை, 2012ல் திருத்தணி, மேட்டுத் தெரு ரயில்வே கேட் அருகே, மோகன் மற்றும் கூட்டாளிகள் ஐந்து பேர் சேர்ந்து, கத்தியால் சராமரியாக வெட்டி தப்பினார். அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த சிவா, சில ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்தார். தன் சித்தப்பாவை கொலை செய்ய முயற்சித்த மோகனை தீர்த்துக் கட்டுவதற்கு தீர்மானித்த சிவா, நோட்டமிட்டு வந்ததாக தெரிகிறது.
இந்நிலையில், நேற்று முன்தினம் சிவாவின் நினைவு நாள் என்பதால், சஞ்சய் கூட்டாளிகளுடன், மோகனை கத்தியால் வெட்டி கொலை செய்தது, விசாரணையில் தெரிய வந்தது.இதையடுத்து, திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து சஞ்சய், விக்னேஷ், ரித்திஷ் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X