இப்படியும் ரசிகர்கள்... | சென்னை செய்திகள் | Dinamalar
இப்படியும் ரசிகர்கள்...
Added : ஆக 10, 2022 | |
Advertisement
 
Latest district News



சென்னை,
ஆந்திர மாநிலம், ஹைதராபாதைச் சேர்ந்த ஸ்ரீனிவாசராவ் - பாவனி தம்பதிக்கு இரண்டு மகன்கள். ஒருவர் பிரணீத், 15; இன்னொருவர் ஷவுரி, 13. இருவரும் நன்றாக செஸ் விளையாடினர். பிரணீத் தேசிய சாம்பியனாகவும் இருந்தார்.இவர், சில ஆண்டுகளுக்கு முன், நடக்கும்போதே அடிக்கடி கீழே விழுந்தார். ஒரு முறை வீட்டில் தடுக்கி விழுந்தார்.அப்போது, மருத்துவர்கள் பரிசோதனையில் தான் தெரிந்தது, அவருக்கு தசை சிதைவு நோய் இருப்பது.பல்வேறு சிகிச்சைகள் அளித்தும், அவரின் தசை வலிமை இழந்தது. எந்த வேலையையும் செய்ய முடியவில்லை. இப்போது நாட்களை எண்ணிக்கொண்டிருக்கிறார். சவுரிக்கும், இதே பாதிப்பு இரண்டாண்டுகளுக்குப் பின் ஏற்பட்டது. பெற்றோர் இப்போது, அவர்களின் ஆசைகளை நிறைவேற்றி வருகின்றனர்.இந்நிலையில் மகன்கள், ஒலிம்பியாட் போட்டியை நேரில் பார்க்க ஆசைப்பட்டனர். இதுகுறித்து, தலைமை செயலர் இறையன்புக்கு கடிதம் எழுதினார் சீனிவாசராவ். அவர்களுக்கு சிறப்பு அனுமதி கிடைத்தது.கடந்த வாரம் முழு விளையாட்டையும் இருவரும் ரசித்தனர். நேற்று, நிறைவு விழாவைக் காண ஆசைப்பட்டனர். இதற்கும் அதிகாரிகள் ஏற்பாடு செய்தனர். தற்போது அவர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.அவர்களை விட, பலமடங்கு மகிழ்ச்சியிலும், நன்றிப் பெருக்கிலும் திளைத்து உள்ளனர் சீனிவாசராவும், பாவனியும்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X