இருளில் மூழ்கும் மதுரை நகர் தெருக்கள்; மின் விளக்கு ஒப்பந்தம் எடுக்க ஆளில்லை | மதுரை செய்திகள் | Dinamalar
இருளில் மூழ்கும் மதுரை நகர் தெருக்கள்; மின் விளக்கு ஒப்பந்தம் எடுக்க ஆளில்லை
Updated : ஆக 10, 2022 | Added : ஆக 10, 2022 | கருத்துகள் (3) | |
Advertisement
 
Latest district News


மதுரை : மதுரை மாநகராட்சி பகுதிகளில் தெரு விளக்குகளை பராமரிக்க ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டும் யாரும் ஆர்வம் காட்டாததால் தெருக்களில் இருள் மிரட்டுகிறது. மாநகராட்சி வார்டுகளில் தெரு விளக்கு கம்பம் பொருத்துதல், மின் இணைப்பு கொடுத்தல் பணியை மின்வாரியம் செய்கிறது. தெரு விளக்குகளை பராமரிப்பது, பழுதுநீக்குவது, புதிதாக பொருத்துவது உள்ளிட்ட பணிகளை மாநகராட்சி செய்கிறது.

இப்பணிகளை மேற்கொள்ள கோவை நிறுவனம் ஒன்று ஒப்பந்தம் எடுத்திருந்தது. ஒப்பந்த காலம் முடிந்த நிலையில் சில மாதங்களுக்கு முன் மாநகராட்சி புதிதாக ஒப்பந்தப்புள்ளி கோரியது. இதுவரை யாரும் ஆர்வம் காட்டவில்லை.ஏற்கனவே எல்.இ.டி., விளக்குகளில் போதிய வெளிச்சம் இல்லாததால் இரவில் இருள் சூழ்ந்து கிடக்கிறது. விளக்குகளை பழுது நீக்குவதிலும் இழுபறி நீடிக்கிறது.

இந்நிலையில் தெரு விளக்கு பராமரிப்பு ஒப்பந்தம் தாமதமாகுவதால் முக்கிய ரோடுகள், தெருக்களில் பழுதான விளக்குகளால் இரவில் இருள் நீடிக்கிறது. இதனால் வழிப்பறி, திருட்டு நடக்கிறது.எனவே புதிதாக டெண்டர் எடுக்கும் நிறுவனத்திடம் வெளிச்சமான விளக்குகளை பொருத்த, முறையாக பராமரிக்க மாநகராட்சி உத்தரவிட வேண்டும். மாநகராட்சியுடன் மின்வாரியம், மின் விளக்கு பராமரிப்பு ஒப்பந்த பணியாளர்கள் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X