முனியப்பன் சுவாமி கோவில் திருவிழா | ஈரோடு செய்திகள் | Dinamalar
முனியப்பன் சுவாமி கோவில் திருவிழா
Added : ஆக 10, 2022 | |
Advertisement
 


ஆண்டுதோறும் ஆடி, 18க்கு அடுத்து வரும் செவ்வாய்கிழமையில், ஊத்தங்கரையில் உள்ள மகா முனியப்பன் சுவாமி திருவிழா நடப்பது வழக்கம்.
இதையொட்டி நேற்று அதிகாலை, விநாயகர், மகா முனியப்பன் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் நடந்தது. தொடர்ந்து பக்தர்கள் சுவாமி கரகம் எடுத்தும், வேல் எடுத்தும் தங்கள் நேர்த்திக்

கடனை செலுத்தினர், ஆயிரக்கணக்கான ஆடு, கோழிகளை பலியிட்டு வேண்டுதலை நிறைவேற்றினர்.
இதில், ஊத்தங்கரை, அ.தி.மு.க.,-எம்.எல்.ஏ., தமிழ்செல்வம் மற்றும்
சுற்று வட்டாரத்திலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கொங்கு இளைஞரணி மற்றும் மகா முனியப்பன் கொங்கு அறக்கட்டளையினர்
செய்திருந்தனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் ஈரோடு கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X