வண்டல் மண் எடுக்கும் பயனாளிகளுக்கு கலந்தாய்வு கூட்டம்
Added : ஆக 10, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 


குளித்தலை அடுத்த, கடவூர் தாசில்தார் அலுவலகத்தில் வண்டல் மண் எடுக்கும் பயனாளிகளுக்கான கலந்தாய்வு கூட்டம் நடந்தது. தாசில்தார் ராஜாமணி தலைமை வகித்தார். இதில், தமிழக அரசின் பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை குளங்களில், விவசாய நிலங்கள் மற்றும் வீட்டு உபயோக பயன்பாட்டுக்கு வண்டல் மண் எடுப்பதற்கு அனுமதி கோரி, வருவாய்
துறைக்கு விண்ணப்பித்திருந்தனர்.

அதன்படி, விண்ணப்பம் செய்திருந்த பயனாளிகளை அழைத்து, அவர்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டன.
இதில் குளம், ஏரி, கண்மாயின் நீர் பிடிப்பு பகுதியில் தண்ணீர் முற்றிலும் இல்லாத காலங்களில் மட்டுமே, களிமண் எடுக்க வேண்டும். நீர்வளத்துறை அதிகாரிகள், வரைபடத்தில் அளவீடுசெய்த இடத்தில் மட்டுமே, வண்டல் மண் எடுக்க வேண்டும். மண் எடுக்கும்போது, ஒரே இடத்தில் எடுக்காமல் பரவலாக எடுக்க வேண்டும். ஏரி, குளங்களில் வண்டல் மண்ணை எடுக்கும்போது, தரையின் மட்டம், கண்மாயில் உள்ள மடையின் அடி மட்டத்துக்கு கீழ் சென்றுவிடக்கூடாது. கண்மாயில் வண்டல் மண் எடுக்க பயன்படுத்தும், வாகனங்கள் செல்ல கரையை வெட்டி சேதப்படுத்தக்கூடாது. இதேபோல், கண்மாயின் நீர்
வரத்து கால்வாய் மற்றும் உபரி நீர் கால்வாய்களின் குறுக்கே செல்லக்கூடாது. அதற்காக ஒதுக்கப்பட்டுள்ள இடத்தை பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.
மேலும், கண்மாய்களில் உள்ள மரம், கட்டடங்கள், கரையில் பதிக்கப்பட்டுள்ள அலை கற்கள், கண்மாய் கரை கலிங்குகள் மற்றும் மதகுகளை சேதப்படுத்தக்கூடாது. சேதப்படுத்தினால், மனுதாரர் தனது சொந்த செலவில் உடனே சரிசெய்து தரவேண்டும். வண்டல் மண் எடுப்பதற்கு முன்னர் சம்பந்தப்பட்ட உதவி பொறியாளர்கள், செயற்பொறியாளர்கள், யூனியன் உதவி பொறியாளர்களை சந்தித்து, மண் எடுக்க அனுமதி வழங்கும் பகுதியை அடையாளம் இட்டு, குறிப்பிட்ட பின்பு தான், மண் எடுக்க வேண்டும்.
இதில் கரையின் அடிப்பகுதியில் இருந்து, கரையின் உயரத்தை போல், 5 மடங்கு துாரத்துக்கு அப்பால் தான் மண் எடுக்க வேண்டும். இதேபோல் கண்மாய் வழியாக செல்லும் உயரழுத்த மின் கோபுரத்துக்கோ, மின் கம்பி செல்லும் வழித்தடத்துக்கோ சேதம் ஏற்படுத்தக்கூடாது. இங்கு, 50 மீட்டர் பாதுகாப்பு இடைவெளி விட்டு வண்டல் மண் எடுக்க வேண்டும். அனுமதி அளித்துள்ள இடத்தை தவிர, மாற்று இடங்களில் மண் எடுத்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அனுமதி அளித்த நபர்களுக்கு பதிலாக, வேறு நபர்கள் வண்டல் மண் எடுப்பது தெரியவந்தால் அனுமதி ரத்து செய்து, நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயிகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அனுமதி அளிக்கப்பட்டுள்ள வண்டல் மண்ணை தவிர, இதர விலை உயர்ந்த தாது மணல் கனிமங்களை எடுப்பது தெரியவந்தால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு, கட்டுப்பாடுகள்
விதிக்கப்பட்டன.
கூட்டத்தில், தேர்தல் பிரிவு துணை தாசில்தார் ரவிவர்மன், பாலவிடுதி ஆர்.ஐ., சண்முகம், வி.ஏ.ஓ.,க்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் திருச்சி கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X