அமராவதி அணையில் தண்ணீர் திறப்பு அதிகரிப்பு: செட்டிப்பாளையம் தடுப்பணை நிரம்பியது | கரூர் செய்திகள் | Dinamalar
அமராவதி அணையில் தண்ணீர் திறப்பு அதிகரிப்பு: செட்டிப்பாளையம் தடுப்பணை நிரம்பியது
Added : ஆக 10, 2022 | |
Advertisement
 


அமராவதி அணையிலிருந்து, ஆற்றில் திறக்கப்பட்ட தண்ணீரின் அளவு, 7,000 கன அடியாக, நேற்று, உயர்த்தப்பட்டது.
திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அமராவதி அணைக்கு, நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 7,550 கன அடி தண்ணீர் வந்தது. இதனால், அமராவதி ஆற்றில் திறக்கப்பட்ட தண்ணீரின் அளவு வினாடிக்கு, 7,323 கன அடியாக, நேற்று அதிகரிக்கப்பட்டது. இதனால், கரூர் அருகே, செட்டிப்பாளையம் தடுப்பணை நிரம்பியது.

அதேபோல், பெரிய ஆண்டாங்கோவில் தடுப்பணைக்கும் தண்ணீர் வரத்து அதிகரித்தது. புதிய பாசன வாய்க்காலில் வினாடிக்கு, 150 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. அணை நீர்மட்டம், 87.37 அடியாக இருந்தது.
நங்காஞ்சி அணை
திண்டுக்கல் மாவட்டம், வடகாடு மலைப்பகுதிகளில் மழை இல்லாததால், நங்காஞ்சி ஆற்றுக்கு தண்ணீர் வரத்து இல்லை. 39.37 அடி உயரம் கொண்ட, நங்காஞ்சி அணை நீர்மட்டம் தற்போது, 33.79 அடியாக உள்ளது. நங்காஞ்சி ஆற்றில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.
ஆத்துப்பாளையம் அணை
கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே, கார்வாழி ஆத்துப்பாளையம் அணைக்கு, நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி அணைக்கு தண்ணீர் வரத்து இல்லை. 26.90 அடி உயரம் கொண்ட அணை நீர்மட்டம், 15.74 அடியாக இருந்ததால், நொய்யல் பாசன வாய்க்காலில், தண்ணீர் திறப்பு நிறுத்தப் பட்டுள்ளது.
மாயனுார் கதவணை
கரூர் மாவட்டம், மாயனுார் கதவணைக்கு, நேற்று முன்தினம், வினாடிக்கு, ஒரு லட்சத்து, 47 ஆயிரத்து, 507 கன அடி தண்ணீர் வந்தது. நேற்று மதியம், 10:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, ஒரு லட்சத்து, 66 ஆயிரத்து, 221 கன அடியாக தண்ணீர் வரத்து அதிகரித்தது. டெல்டா பாசன பகுதியில் குறுவை சாகுபடிக்காக, காவிரியாற்றில், ஒரு லட்சத்து, 65 ஆயிரத்து, 101 கன அடி தண்ணீரும், நான்கு பாசன கிளை வாய்க்காலில், 1,020 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டுள்ளது.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் திருச்சி கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X