தன்னார்வலர்களுக்கு 2 நாட்கள் பயிற்சி வழங்க திட்டம்
Added : ஆக 10, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 

உடுமலை: இல்லம் தேடி கல்வி மைய தன்னார்வலர்களுக்கு, குழந்தைகளை கையாள வேண்டிய விதம் மற்றும் கற்றல் ஊக்கப்படுத்தும் விதமாக இரு நாட்கள் பயிற்சி வழங்கப்படவுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக, ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கற்றல் இடைவெளி இழப்பினை ஈடுசெய்வதற்காக, தன்னார்வலர்களை கொண்டு தினசரி, ஒன்றரை மணி நேரம் குறைதீர் கற்றல் செயல்பாடுகள் மேற்கொள்ளப்படுகிறது.மேலும் மாணவர்கள் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில், 'இல்லம் தேடி கல்வி' மையங்கள், திருப்பூர் மாவட்டத்தில் செயல்பட்டு வருகிறது. இதன் தன்னார்வலர்களை ஊக்கப்படுத்தும் விதமாக இரு நாள் பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:இப்பயிற்சி குறுவளமைய பயிற்சியாக, 1 முதல் 5 வகுப்புகளை கையாளும் தன்னார்வலர்களுக்கு ஒரு பிரிவாகவும், 6 முதல், 8 வகுப்புகளை கையாளும் தன்னார்வலர்களுக்கு மற்றொரு பிரிவாகவும் வழங்கப்படவுள்ளது.இதற்கான கருத்தாளர்களுக்கு மாநில அளவில் நேற்று துவங்கி, 13ம் தேதி வரையிலும், மாவட்ட அளவில் ஆக., 13 முதல், 26 வரையிலும் நடைபெறும். இந்த தகவலை ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மாநில திட்ட இயக்ககம் தெரிவித்துள்ளது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X