பள்ளிகளில் விழிப்புணர்வு வாரம்; கல்வித்துறை திட்டம்
Added : ஆக 10, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 

உடுமலை : கொரோனா தொற்றால் மாணவர் கற்றல் முறைகளில் குறிப்பிடத்தகுந்த மாறுதல் ஏற்பட்டுள்ளது. மாணவர் உடல், மனநலனை காக்க மருத்துவ குழுக்களைக்கொண்டு விழிப்புணர்வை ஏற்படுத்தவும், உரிய பரிசோதனைகள் செய்யவும் பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

அதன்படி, திருப்பூர் மாவட்டத்தில், அரசு மற்றும் உதவிபெறும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில், இன்று முதல் விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கவும், வரும் 12 முதல் 19 வரை மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை, சமூக நலம் மற்றும் மகளிர் மேம்பாட்டுத்துறை, சமூக பாதுகாப்புத்துறை, காவல்துறையுடன் இணைந்து விழிப்புணர்வு வாரத்தை செயல்படுத்த பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:மருத்துவ பரிசோதனைகள் வாயிலாக பிறவிக்குறைபாடுகள், பருவ நோய்கள், தாமதமான வளர்ச்சி மற்றும் குறைபாடுகள் கண்டறியப்பட்டு ஆரம்ப நிலையிலே சிகிச்சை வழங்க அறிவுறுத்தப்படும்.வளரிளம் பருவத்தினருக்கு ஊட்டச்சத்து மேம்பாடு, உடலளவிலும், மனதளவிலும் ஏற்படும் மாற்றங்கள் குறித்த விழிப்புணர்வுடன், வியாழன்தோறும் மதிய உணவுக்கு பின் இரும்புச்சத்து மாத்திரை வழங்கப்படுகிறது.

ஒன்று முதல், 18 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு பள்ளிகளிலேயே குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்படுகிறது. இத்திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்தும் வழிமுறைகள் குறித்த ஆலோசனை வழங்கப்படும். மேலும், சரிவிகித உணவின் முக்கியத்துவம், குழந்தை திருமணம், சானிட்டரி நாப்கின் பயன்பாடு மற்றும் அதனை பாதுகாப்பாக எரியூட்டுதல் குறித்த விழிப்புணர்வு, 'போக்சோ' குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

போதைபொருள் குறித்த விழிப்புணர்வு, சாலை பாதுகாப்பு, பாதுகாப்பாக இணையத்தை பயன்படுத்தல், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், சைல்டு லைன் எண்: 1098, மாணவர் உதவி எண்: 14417 குறித்த விழிப்புணர்வு அளிக்க அறுவுறுத்தப்பட்டுள்ளது.அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து இத்திட்டத்தை செயல்படுத்திட கலெக்டர் தலைமையில் சம்பந்தப்பட்ட துறைத்தலைவர்கள் அடங்கிய குழு ஒன்று அமைக்கப்படும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.


 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X