நீலகிரியில் 3 அணைகள் திறப்பு: முதுமலை தரைப்பாலம் மூழ்கியது! | நீலகிரி செய்திகள் | Dinamalar
நீலகிரியில் 3 அணைகள் திறப்பு: முதுமலை தரைப்பாலம் மூழ்கியது!
Added : ஆக 10, 2022 | |
Advertisement
 
Latest district News

ஊட்டி:நீலகிரி மாவட்டத்தில், மூன்று அணைகள் திறக்கப்பட்டு, உபரிநீர் வெளியேற்றப்படுகிறது.

நீலகிரியில் பருவமழை தொடர்ந்து பெய்கிறது. குந்தா - பைக்காரா நீர்மின் திட்டத்தில், 13 அணைகள் உள்ளன. இவற்றில் படிப்படியாக நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.முழு கொள்ளளவை எட்டிய அணைகளை திறந்து, மின் வாரியம் உபரி நீரை வெளியேற்றி வருகிறது.பைக்காரா அணை முழு கொள்ளளவான,100 அடியை எட்டியதை அடுத்து, பாதுகாப்பு கருதி, மூன்று மதகுகளில் வினாடிக்கு, 750 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

முழு கொள்ளளவான, 89 அடியை எட்டிய குந்தா அணை; 33 அடியை எட்டிய கிளன்மார்கன் அணைகளும் திறக்கப்பட்டு உபரிநீர் வெளியேற்றப்படுகிறது.குந்தா மின் வட்ட மேற்பார்வை செயற்பொறியாளர் செந்தில் ராஜன் கூறுகையில்,''தடையின்றி மின் உற்பத்தி நடக்கிறது. மீதமுள்ள அணைகள் நிரம்பினால், எந்த நேரமும் திறக்க வாய்ப்புள்ளது,'' என்றார்.

பைக்காரா, கிளன்மார்கன் அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட உபரி நீர் காரணமாக, மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, முதுமலை தரைப்பாலம் மூழ்கியது. இதனால், அப்பகுதியில் போக்குவரத்து தடைபட்டுள்ளது; வாகனங்கள் அனுமதிக்கப்படுவதில்லை. மசினகுடி உட்பட 10 கிராம மக்கள், கடும் சிரமத்துக்கு ஆளாகிஉள்ளனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X