பாதாள சாக்கடை பராமரிப்பு பணிமழைக்கு முன் கவனிக்க கோரிக்கை
Added : ஆக 11, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 



அம்பத்துார்,பருவ மழை காலத்திற்கு முன், பாதாள சாக்கடை அடைப்பு உள்ளிட்ட பராமரிப்பு மற்றும் மழை நீர் வடிகால் பணிகளை, விரைந்து மேற்கொள்ள வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.சென்னை மாநகராட்சி, அம்பத்துார் மண்டலத்தில், பாதாள சாக்கடை அடைப்பு பிரச்னையால், ஆங்காங்கே சுகாதார சீர்கேடு நிலவுகிறது.அரைகுறை பணிஇந்த மண்டலத்தின், 15 வார்டுகளிலும், 80 சதவீதம் பாதாள சாக்கடை, 50 சதவீதம் மழைநீர் வடிகால் திட்டப் பணிகள் நடந்திருந்தாலும், 1 மணி நேரம் பலத்த மழை நீடித்தால், மழை நீருடன் கழிவு நீர் கலந்து பாயும் நிலை தான் உள்ளது.அதனால், அம்பத்துார் வெங்கடாபுரம், ஒரகடம், புதுார், பானுநகர், கள்ளிக்குப்பம், கிழக்கு பாலாஜி நகர், முத்தமிழ் நகர், மாதானாங்குப்பம், மேனாம்பேடு கருக்கு பகுதிகள் பாதிக்கின்றன. மேலும், பட்டரவாக்கம், ஞானமூர்த்தி நகர், அத்திப்பட்டு, கொரட்டூர், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் என, மண்டலத்தின் அனைத்து பகுதியிலும் உள்ள குடியிருப்புகள் பாதிக்கப்படுவது தொடர்கிறது.கடந்தாண்டு இறுதியில் நீடித்த பருவ மழையின் போதும், இந்த நிலை ஏற்பட்டது.அதற்கு காரணம், நீரோட்ட சோதனை ஏதும் செய்யாமல், பெயரளவில் அமைக்கப்பட்ட பாதாள சாக்கடை திட்டப்பணி தான். சென்னை குடிநீர் வாரியமும், சாலை பராமரிப்பில் சென்னை மாநகராட்சியும் காட்டும் அலட்சியமும் இதற்கு காரணம்.அதனால் ஏற்படும் பாதாள சாக்கடை அடைப்பால், ஆங்காங்கே கழிவுநீர் வெளியேறி, சாலைகளில் பாய்ந்து, தாழ்வான பகுதியில் உள்ள வீடுகளிலும் பாய்வது வழக்கமாகி விட்டது.அந்த பகுதிகளில் சுகாதார சீர்கேடும் அதிகரிக்கிறது. மேலும், கடந்த இரண்டு ஆண்டுக்கு முன் துவங்கிய மழை நீர் வடிகால் திட்டப்பணியும், அரைகுறையாக உள்ளது. அதிருப்திவிடுபட்ட மழை நீர் வடிகால் பணியை, செப்டம்பர் மாதத்திற்குள், விரைந்து முடிக்க வேண்டும் என, கடந்த ஜூலை மாதம், நகராட்சி நிர்வாகத்துறை உத்தரவிட்டது. ஆனாலும், ஆட்கள் இல்லாத நிலையில், அந்த பணியும் ஒரு சில இடங்களை தவிர, மற்ற பகுதிகளில் நடக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.அதனால், அரைகுறையாக உள்ள மழை நீர் வடிகாலில் தேங்கும் கழிவு நீராலும், சுகாதார சீர்கேடு அதிகரித்துள்ளது. இது குறித்து, மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் செய்தால், குடிநீர் வாரியத்திடம் புகார் செய்யுங்கள் என, பொதுமக்களை அலைக்கழிக்கின்றனர். குடிநீர் வாரியத்திடம் புகார் செய்தால், 'பணியாளர்கள் பற்றாக்குறையால், புகார் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க முடியாது. ஓரிரு நாட்களாகும்' என்கின்றனர்.அதனால், பொது மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இந்நிலையில், அடுத்த மூன்று மாதத்தில் பருவ மழை துவங்கும் முன், பாதாள சாக்கடை அடைப்பு உள்ளிட்ட பராமரிப்பு பணியை மேற்கொள்ளவும், அரைகுறையான மழை நீர் வடிகால் பணிகளை சீரமைக்க வேண்டும் என, மக்கள் எதிர்பார்க்கின்றனர்.



சாக்கடை மற்றும் மழை நீர் வடிகால் பிரச்னை குறித்த புகார்களை, மேற்கண்ட இரு துறையினரும் கண்டுகொள்வதில்லை. ஆனால், சொத்து வரி, குடிநீர் வரி என அனைத்தையும் நிலுவையின்றி வசூலித்து விடுகின்றனர். குடிநீர் வரி வசூலித்தாலும், பல இடங்களில் இன்று வரை, டேங்கர் லாரி வாயிலாக, தொட்டிகளில் குடிநீர் வினியோகம் நடக்கிறது. அதையும் கடந்து, வீட்டு இணைப்புகளில் குடிநீர் வினியோகித்தால், பாதாள சாக்கடை அடைப்பு, அரைகுறையான மழை நீர் வடிகால் பணி ஆகியவற்றால், கழிவு நீர் கலந்து வருகிறது. அதை குடிக்க பயன்படுத்த முடியாத நிலை நீடிக்கிறது.

பொதுமக்கள், அம்பத்துார்.




 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X