பட்டினத்தார் குருபூஜைதிருவொற்றியூரில் கோலாகலம் | சென்னை செய்திகள் | Dinamalar
பட்டினத்தார் குருபூஜைதிருவொற்றியூரில் கோலாகலம்
Added : ஆக 11, 2022 | |
Advertisement
 



திருவொற்றியூர், சென்னை திருவொற்றியூர், எண்ணுார் விரைவு சாலை, திருவொற்றியூர் குப்பம் அருகே, பழமை வாய்ந்த பட்டினத்தார் கோவில் உள்ளது. ஆண்டுதோறும் பட்டினத்தார் திருநட்சத்திர நாளான உத்திராடம் நட்சத்திரத்தில், பட்டினத்தார் குருபூஜை நடைபெறுவது வழக்கம்.அந்த வகையில் இந்தாண்டில், நேற்று காலை உத்திராட நட்சத்திரத்தில், பட்டினத்தார் குருபூஜை வெகு விமரிசையாக நடைபெற்றது.பட்டினத்தார் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு, மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. முன்னதாக காலை, தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவிலில் இருந்து, தேவாரத் திருமுறை பாராயணத்துடன், நுாற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் ஊர்வலமாக, பட்டினத்தார் கோவிலை வந்தடைந்தனர்.அதைத் தொடர்ந்து, குணசேகரன் குழுவினரின் மேளக்கச்சேரி, சினிமா நடிகர் சூப்பர் சுப்பராயன், திருமந்திர திலகம் மா.கி. ரமணன், நல்லுார் சரவணன் மற்றும் ஜெயப்பிரகாஷ் ஆகியோரது தொடர் சொற்பொழிவுகள் நடைபெற்றன.குறிப்பாக மாலையில், பட்டினத்தார் சுவாமி உற்சவர் வீதி உலா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிகளில், கோவில் உதவி கமிஷனர் பாஸ்கரன் மற்றும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X