தேர் விபத்து எதிரொலிசெயல் அலுவலர் 'சஸ்பெண்ட்' | புதுக்கோட்டை செய்திகள் | Dinamalar
தேர் விபத்து எதிரொலிசெயல் அலுவலர் 'சஸ்பெண்ட்'
Added : ஆக 11, 2022 | |
Advertisement
 

புதுக்கோட்டை:புதுக்கோட்டையில், பிரகதாம்பாள் உடனுறை கோகர்ணேஸ்வரர் கோவிலில் தேர் கவிழ்ந்த விபத்து தொடர்பாக, செயல் அலுவலர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.

புதுக்கோட்டை, திருக்கோகர்ணத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பிரகதாம்பாள் உடனுறை கோகர்ணேஸ்வரர் கோவிலில், ஜூலை, 31ம் தேதி, ஆடிப்பூர தேர்த்திருவிழா நடைபெற்றது. நிலையில் இருந்து புறப்பட்ட தேர், சில நிமிடங்களில் கவிழ்ந்ததில் எட்டு பேர் காயம் அடைந்தனர்.அதில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அரிமளம் பகுதியைச் சேர்ந்த ராஜகுமாரி, 64, இறந்தார்.

இது குறித்து, கூடுதல் ஆணையர் தலைமையில் தனிக்குழு அமைத்து விசாரணை நடத்தப்படும் என, அமைச்சர் சேகர்பாபு அறிவித்தார்.இந்நிலையில், நேற்று முன்தினம் கோவில் மேற்பார்வையாளர் மாரிமுத்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். கோவில் செயல் அலுவலர் ராமமூர்த்தி சஸ்பெண்ட் செய்யப்பட்டார். தொடர்ந்து, பெரம்பலுார் மாவட்டத்தில் பணியாற்றி வரும் சந்திரசேகர் செயல் அலுவலராக பொறுப்பேற்றார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் திருச்சி கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X