ஏட்டை தாக்கிய வாலிபர் கைதுதப்பிய மற்றொருவருக்கு வலை | தஞ்சாவூர் செய்திகள் | Dinamalar
ஏட்டை தாக்கிய வாலிபர் கைதுதப்பிய மற்றொருவருக்கு வலை
Added : ஆக 11, 2022 | |
Advertisement
 

தஞ்சாவூர்:ஒரத்தநாட்டில் மது போதையில் போலீஸ் ஏட்டை தாக்கி அவரின் சீருடையை கிழித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.


தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு கடைத்தெருவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் நேற்று முன்தினம் இரவு கண்ணந்தங்குடி மேலையூர் பகுதியை சேர்ந்த விக்ரமன் 36 கார்த்திக் நகரை சேர்ந்த சரவணன் 35 உள்ளிட்ட சிலர் சாப்பிட சென்றுள்ளனர்.அவர்கள் ஹோட்டலுக்கு சென்று வருபவர்களுக்கு இடையூறாக டூ- வீலரை நிறுத்தியுள்ளனர். ஹோட்டல் உரிமையாளரின் மகன் கணேஷ் டூ- வீலரை ஓரமாக நிறுத்துமாறு கூறியுள்ளார்.
மது போதையில் இருந்த விக்ரமனும் சரவணனும் கணேஷை தகாத வார்த்தையில் திட்டி தாக்க முயன்றனர். இந்நிலையில் ஒரத்தாடு போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்றும் கோபிநாத் 35 தகராறு செய்தவர்களை சமதானம் செய்ய முயன்றார்.அப்போது சரவணன் விக்ரமன் உள்ளிட்ட சிலர் கோபிநாத்தை தாக்கி அவரது சீருடையை கிழித்து விட்டு தப்பியோடி விட்டனர். இது குறித்து கோபிநாத் அளித்த புகார்படி போலீசார் வழக்கு பதிவு செய்து நேற்று விக்ரமனை கைது செய்தனர். தப்பியோடிய சரவணனை தேடி வருகின்றனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் திருச்சி கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X