பஸ் இன்றி ஆட்டோவில் பயணம் பிளஸ் 1 மாணவி தவறி விழுந்து பலி | நாமக்கல் செய்திகள் | Dinamalar
பஸ் இன்றி ஆட்டோவில் பயணம் பிளஸ் 1 மாணவி தவறி விழுந்து பலி
Added : ஆக 11, 2022 | |
Advertisement
 

சேந்தமங்கலம்:கொல்லிமலையில் போதிய பஸ் வசதி இல்லாததால், சரக்கு ஆட்டோவில் பயணித்த பிளஸ் 1 மாணவி, தவறி விழுந்து இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில், நேற்று முன்தினம், சித்துார் நாடு பஞ்சாயத்து, நரியங்காடு பகுதியைச் சேர்ந்த டிரைவர் பிரகாஷ், 35, சரக்கு ஆட்டோ ஓட்டி வந்தார். அப்போது, பள்ளி செல்ல பஸ்சில் இடம் இல்லாமல் சாலையில் நின்றிருந்த, முள்ளுக்குறிச்சி உறைவிட பெண்கள் மேல்நிலைப்பள்ளி பிளஸ் 1 மாணவியர், 10க்கும் மேற்பட்டோர் சரக்கு ஆட்டோவில் ஏறி பள்ளி சென்றனர்.

ஆட்டோ கீழ் பூசணிக்காடு என்ற இடத்தில் கொண்டை ஊசி வலைவில் திரும்பிய போது, மாணவியர் அகிலா, 17, ரூபிகா, 16, ஆகியோர் தவறி சாலையில் விழுந்தனர். இதில் பலத்த காயமடைந்த அகிலா, உயிருக்கு ஆபத்தான நிலையில், சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி அவர் நேற்று இறந்தார்.

செங்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.போதிய பஸ் வசதி இல்லாததால், பள்ளி மாணவியர் சரக்கு ஆட்டோவில் செல்லும் அவலம் நீண்ட நாட்களாக நீடித்து வருகிறது. தற்போது மாணவி உயிரை பலி வாங்கியுள்ளது, மலை கிராம மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் சேலம் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X