சிறுத்தை தாக்கி கோத்தகிரி சிறுமி பலி | நீலகிரி செய்திகள் | Dinamalar
சிறுத்தை தாக்கி கோத்தகிரி சிறுமி பலி
Added : ஆக 11, 2022 | |
Advertisement
 

கோத்தகிரி:கோத்தகிரி அருகே சிறுத்தை தாக்கி, 4 வயது சிறுமி பலியானார்.

நீலகிரி மாவட்டம்,தேனோடுகம்பை அரக்காடு பகுதியில் தனியார் தேயிலை தோட்டம் உள்ளது.இந்த தோட்டத்தில், குழந்தையை வனவிலங்கு தாக்கி இழுத்துசென்றதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. வனத்துறை தேடுதலில், நிஷாத் என்பவரது, 4 வயது மகள் சரிதா கழுத்தில் ரத்த காயங்களுடன் சுய நினைவின்றி கிடந்தது தெரியவந்தது.

ஊட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர்.வனத்துறையினர் கூறுகையில், 'குழந்தை சுயநினைவின்றி கிடந்த பகுதியில், கால் தடங்களை ஆய்வு செய்ததில், சிறுத்தை தாக்கியிருக்கலாம் என தெரிய வந்துள்ளது. அது குறித்து மேலும் விசாரித்து வருகிறோம்' என்றனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X