சுயேச்சை சேர்மன் - தி.மு.க., செயலர் பூமி பூஜையில் பங்கேற்பதில் மோதல் | நாமக்கல் செய்திகள் | Dinamalar
சுயேச்சை சேர்மன் - தி.மு.க., செயலர் பூமி பூஜையில் பங்கேற்பதில் மோதல்
Added : ஆக 11, 2022 | |
Advertisement
 

குமாரபாளையம்:குமாரபாளையத்தில் நுாலகம் அறிவுசார் மையம் கட்டும் பணிகளுக்கான பூமிபூஜையில் பங்கேற்பதில் ஏற்பட்ட பிரச்னையில் சுயேச்சை சேர்மன் மற்றும் தி.மு.க. நகர செயலர் தரப்பினர் மோதிக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நகராட்சி சின்னப்பநாயக்கன்பாளையம் வாரச்சந்தை வளாகத்தில் 1.92 கோடி ரூபாய் மதிப்பில் நுாலகம் அறிவுசார் மையம் கட்ட நகராட்சி சுயேச்சை சேர்மன் விஜய்கண்ணன் தலைமையில்பூமிபூஜை நடந்தது.
பூஜையில் பங்கேற்க குமாரபாளையம் தி.மு.க. நகர செயலர் செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வந்தனர். சேர்மன் விஜய்கண்ணன் நகராட்சி சார்பில் நடக்கும் பூமிபூஜையில் பங்கேற்க அரசியல் கட்சியினருக்கு அனுமதி இல்லை கவுன்சிலர்கள் பங்கேற்கலாம் என கூறினார்.

இதற்கு நகர செயலர் செல்வம் தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து தகராறு செய்தனர். அப்போது வாக்குவாதம் ஏற்பட்டு சேர்மன் மற்றும் நகர செயலர் தரப்பினருக்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போலீசார் இரு தரப்பினரையும் சமாதானம் செய்தனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் சேலம் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X