பள்ளி விவகாரம்: பேச்சுவார்த்தை மீண்டும் தோல்வி | மதுரை செய்திகள் | Dinamalar
பள்ளி விவகாரம்: பேச்சுவார்த்தை மீண்டும் தோல்வி
Added : ஆக 11, 2022 | |
Advertisement
 



திருமங்கலம் : திருமங்கலம் செட்டிக்குளத்தில் சேதம் அடைந்த அரசு உதவி பெறும் துவக்கப்பள்ளியை சீரமைக்க வலியுறுத்தி பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்த பெற்றோரிடம், ஆர்.டி.ஓ., நடத்திய 3 ம் கட்ட பேச்சு வார்த்தை தோல்வி அடைந்தது.பள்ளி கட்டடத்தை சீரமைக்க வலியுறுத்தி பத்து நாட்களுக்குமுன், மாணவர்களுடன் பெற்றோர் தர்ணாவில் ஈடுபட்டனர்.

அப்போது கல்வி அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது.நான்கு நாட்களுக்கு முன்பு திருமங்கலம் தாலுகா அலுவலகத்தில் நடந்த சமாதான கூட்டம் தோல்வி அடைந்தது.இந்நிலையில் நேற்று மூன்றாவது முறையாக ஆர்.டி.ஓ., அபிநயா தலைமையில் சமாதான கூட்டம் நடந்தது. இதிலும் எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர், மற்ற பள்ளிகளுக்கு செல்ல 4 கி.மீ., செல்ல வேண்டியுள்ளதால் விபத்து அபாயம் உள்ளது.அப் பள்ளியை அரசு பள்ளியாக மாற்ற வேண்டும் என்றதால், பேச்சுவார்த்தை மீண்டும் தோல்வி அடைந்தது. 15 நாட்களுக்கும் மேலாக குழந்தைகள் பள்ளிக்கு செல்லாததால் படிப்பு பாதித்துள்ளது.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X