சிகிச்சை பாதி அவஸ்தை மீதியாய் புற்றுநோயாளிகள்; ரேடியோதெரபிக்காக அலைக்கழிப்பு
Updated : ஆக 11, 2022 | Added : ஆக 11, 2022 | கருத்துகள் (3) | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Latest district News


பாலரெங்காபுரத்தில் 2 ஆண்டுகளுக்கு முந்தைய பட்ஜெட்டில் புற்றுநோய் மண்டல மையம் அமைக்க திட்டமிடப்பட்டது. மதுரைக்கு எய்ம்ஸ் வருவதால் இம்மையத்தை திட்ட கமிஷன் தஞ்சாவூருக்கு மாற்றிவிட்டது. இதனால் பாலரெங்காபுரத்தில் ரூ.3 கோடி மதிப்பில் தரைத்தளம், முதல்தளம் அமைத்து ரூ.15 கோடி மதிப்புள்ள அதிநவீன ரேடியோதெரபி கருவி (லீனாக்) நிறுவப்பட்டது.

எலக்ட்ரிசிட்டி ஜெனரேட்டட் ரேடியேஷன்' எனப்படும் இக்கருவியில் 'சுவிட்ச்' போட்டால் தான் கதிர்வீச்சு வரும் என்பதால் பாதுகாப்பானது. புதிய கருவி வாங்குவதற்கு முன்வரை மதுரை அரசு மருத்துவமனையில் புற்றுநோய் மருத்துவம், அறுவை சிகிச்சை, கோபால்ட் ரேடியோதெரபி பிரிவு செயல்பட்டு வந்தது. புதிய கருவி வந்ததும் 3 மாதங்களுக்கு முன்பாக இங்கிருந்த ரேடியோதெரபி துறை பாலரெங்காபுரத்திற்கு மாற்றப்பட்டது. அன்றிலிருந்து புற்றுநோயாளிகள் வேதனையை அனுபவித்து வருகின்றனர்.

மதுரை அரசு மருத்துவமனைக்கு வரும் புற்றுநோயாளிகளுக்கு மருந்துகள் போதுமா, அறுவை சிகிச்சை தேவையா, ரேடியோதெரபி கொடுப்பதா என டாக்டர்கள் பரிந்துரைக்க வேண்டும். நோயின் தன்மையை பொறுத்து ஒரு மாதம் வரை ரேடியோதெரபி எடுக்க வேண்டும். புற்றுநோய் தொடர்பான பல்வேறு வார்டுகளில் இருந்து தினமும் 70 நோயாளிகள் வரை பாலரெங்காபுரம் மருத்துவமனைக்கு ரேடியோதெரபி சிகிச்சைக்கு செல்ல பரிந்துரைக்கப்படுகின்றனர்.

இங்கிருந்து ஆம்புலன்சில் அழைத்துச் செல்லப்படுகின்றனர். சில நேரங்களில் ஆம்புலன்சுக்காக மணிக்கணக்கில் நோயாளிகள் காத்திருந்து 10 நிமிட ரேடியோதெரபி சிகிச்சைக்காக தினமும் அலைக்கழிக்கப்படுகின்றனர். சிலநேரங்களில் பாலரெங்காபுரம் சென்றால் ஸ்கேன், ரத்தபரிசோதனை செய்து வரச் சொல்லி மீண்டும் அரசு மருத்துவமனைக்கு அனுப்புகின்றனர்.

உள்ளூர் நோயாளிகள் வீடு திரும்பலாம். வெளியூர் நோயாளிகள் வலியுடன் ரேடியோதெரபி எடுத்துவிட்டு மீண்டும் வீடு சென்று மறுநாள் வரவேண்டும். இதனால் சோர்வடைந்து பாதிக்கப்படுகின்றனர். அரசு மருத்துவமனையில் 'லீனாக்' கருவி இருந்தால் வெளியூர் நோயாளிகளை வார்டில் தங்கவைத்து சிகிச்சை அளிக்கமுடியும்.
வலி, வேதனையுடன் அங்குமிங்கும் அலைவதையும் தவிர்க்க முடியும். 'லீனாக்' கருவி மட்டும் இங்கு கொண்டு வந்தால் ஒருங்கிணைந்த புற்றுநோய் மையமாக மாற்றிவிடலாம் மாவட்ட நிர்வாகமும் மருத்துவமனை நிர்வாகமும் புற்றுநோயாளிகளின் நலனில் அக்கறை வைத்து கருவியை இடமாற்ற வேண்டும்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kundalakesi - Coimbatore,இந்தியா
11-ஆக-202218:21:26 IST Report Abuse
Kundalakesi இதை இட மாற்றம் செய்தவரை தண்டிக்க வேண்டும்
Rate this:
Cancel
Ramamurthy N - Chennai,இந்தியா
11-ஆக-202217:46:05 IST Report Abuse
Ramamurthy N 10வருஷமாக திரு செல்லூரார் என்ன செய்தார்? மக்கள் குறைகளை கேட்க வரவில்லையா? மதுரைக்கு தங்கள் ஆட்சியில் நிறைய செய்ததாக கூறினாரே.
Rate this:
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
11-ஆக-202217:12:41 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் நல்ல பரிந்துரை. அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்றால் விரைவான நல்ல முடிவு கிட்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X