சட்டசபையில் தி.மு.க., - காங். வெளிநடப்பு: கவர்னர் உரையாற்ற எதிர்ப்பு
Added : ஆக 11, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Latest district News



புதுச்சேரி 15வது சட்டசபையின் மூன்றாவது கூட்டத் தொடர் நேற்று கவர்னர் உரையுடன் துவங்கியது.

கவர்னர் வருகை
கவர்னர் தமிழிசை காலை 9:24 மணிக்கு சட்டசபைக்கு வருகை தந்தார். அவருக்கு, போலீஸ் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.சபாநாயகர் செல்வம், சட்டசபை செயலர் முனிசாமி ஆகியோர், கவர்னரை வரவேற்று, மைய மண்டபத்திற்கு அழைத்துச் சென்றனர். தமிழ்த்தாய் வாழ்த்துடன் சட்டசபை நிகழ்வு துவங்கியது.

கருப்பு சட்டை
முன்னதாக சபைக்கு வந்திருந்த எதிர்க்கட்சி தலைவர் சிவா, தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் நாஜிம், அனிபால் கென்னடி, செந்தில்குமார், சம்பத், நாக தியாகராஜன் மற்றும் காங்., கட்சியை சேர்ந்த வைத்தியநாதன், ரமேஷ் பரம்பத் ஆகிய 8 பேரும் கருப்பு சட்டை அணிந்திருந்தனர்.

மைக் இணைப்பு துண்டிப்பு
இவர்கள், கவர்னர் பேசத் துவங்கியதும், எழுந்து நின்று மைக்கில் பேச முயன்றனர். உடன், அவர்களின் மைக் இணைப்பு துண்டிக்கப் பட்டது.

தொடர் கூச்சல்
இருப்பினும், சிவா உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.,க்கள், கவர்னரை நோக்கி, 'தே.ஜ., கூட்டணி ஆட்சிக்கு வந்தால் புதுச்சேரியில் பாலாறும், தேனாறும் ஓடும் என்றீர்கள். ஆனால், பட்ஜெட்டிற்கு கூட அனுமதி வாங்க முடியவில்லை. விலைவாசி உயர்ந்துள்ளது. வேலையில்லா திண்டாட்டம் பெருகி உள்ளது.கடந்த பட்ஜெட்டில் அறிவித்த எந்த திட்டங்களும் செயல்பாட்டிற்கு வரவில்லை. மக்கள் நலத்திட்டங்கள் நிறைவேற்றப் படவில்லை.மாநிலத்தில் அதிகாரம் செலுத்தும் கவர்னர் கடமையை உணர்ந்து பட்ஜெட்டிற்கு அனுமதி வாங்கித் தராதது ஏன்' என தொடர்ந்து கேள்வி எழுப்பினர்.ஆனால், கவர்னர் தனது உரையை தொடர்ந்து படித்துக் கொண்டிருந்தார்.

வெளிநடப்பு
அதனைத் தொடர்ந்து, பட்ஜெட்டிற்கு, மத்திய அரசிடம் கவர்னர் அனுமதி பெற்றுத் தராததை கண்டித்தும், கவர்னர் உரையாற்ற எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டபடி, 8 பேரும் வெளிநடப்பு செய்தனர்.பின்னர் அனைவரும், சபைக்கு வெளியே உள்ள அரங்கில் நின்று, மக்களாட்சி மாண்பை குறைக்காதே ... கவர்னர் பதவி கட்சி பதவியா? பதவி விலகு.. பட்ஜெட் என்னாச்சி, மாநில அந்தஸ்து என்னாச்சி என கோஷமிட்டனர்.இந்த சம்பவத்தினால் சட்டசபை வளாகத்தில் சற்று நேரம் பரபரப்பு நிலவியது.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X