மாமல்லபுரத்தில் சர்வதேச காற்றாடி திருவிழா
Updated : ஆக 11, 2022 | Added : ஆக 11, 2022 | கருத்துகள் (8) | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 

மாமல்லபுரம்: தமிழக சுற்றுலாத் துறை பங்களிப்புடன் மாமல்லபுரம் கடலோர பகுதியில், சர்வதேச காற்றாடி திருவிழாவை மூன்று நாட்கள் நடக்கிறது. தமிழகத்தில் முதல் முறையாக இப்போட்டி என்பதால், அதற்கான ஏற்பாடுகள் ஜரூராக நடக்கின்றன.latest tamil newsமாமல்லபுரத்தில், கி.பி., 7 - 8ம் நுாற்றாண்டு பல்லவர் கால கலைச்சின்னங்கள் உள்ளன. ஐ.நா., சபையின் கல்வி மற்றும் கலாசார பிரிவு, இவ்வூர் சிற்பங்களை, சர்வதேச பாரம்பரிய நினைவுச் சின்னங்களாக அங்கீகரித்துள்ளது. இதன் காரணமாக, சர்வதேச பாரம்பரிய சிற்பக்கலை இடமாக விளங்குவதால். உள்நாடு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணியர், கலைச்சிற்பங்களை காண்கின்றனர்.

பிரதமர் மோடி - சீன அதிபர் ஜீ ஜின்பிங் ஆகியோர், 2019ல், முறைசாரா மாநாடாக, இங்கு சந்தித்தபோது, இவ்வூர் உலக நாடுகளின் சிறப்பு கவனம் பெற்றது. பண்டைய தமிழக - சீன தொடர்பை அறிந்து, வெளிநாட்டுப் பயணியர், சுற்றுலாவிற்கு குவிந்தனர்.மீண்டும் ஓர் உலக கவன ஈர்ப்பு நிகழ்வாக, 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி ஜூலை 29 முதல் நேற்று முன்தினம் வரை, நடந்தது. இப்பகுதியை அறியாத பல வெளிநாட்டவரும், தற்போது அறிந்து வியந்தனர்.

இத்தகைய ஈர்ப்பின் மற்றொரு நிகழ்வாக, சர்வதேச காற்றாடி திருவிழாவும், மாமல்லபுரத்தில் நடக்கவுள்ளது.குளோபல் மீடியா பாக்ஸ் நிறுவனம், தமிழக சுற்றுலாத் துறையின் பங்களிப்புடன், நாளை மறுநாள் துவங்கி ஆக., 15 வரை, இவ்விழாவை நடத்துகிறது.சென்னை, பொள்ளாச்சி பகுதிகளில், வெப்ப காற்று பலுான் விழாவை, ஆண்டுதோறும் நடத்தும் நிறுவனம், தமிழகத்தில் முதல்முறையாக, மாமல்லபுரத்தில் சர்வதேச காற்றாடி திருவிழாவை நடத்துகிறது.மாமல்லபுரம் சுற்றுலாப் பகுதியில், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின், திறந்தவெளி வளாக கடற்கரை பகுதியில், இவ்விழா நடக்கிறது.


இத்தகைய சர்வதேச போட்டிகளால், மாமல்லபுரம் சுற்றுலா பகுதியாக மட்டுமின்றி, சர்வதேச நிகழ்விடமாக வெளிநாடுகளையும், பன்னாட்டு நிறுவனங்களையும் கவர்ந்துள்ளது. சர்வதேச பீச் வாலிபால் போட்டி உட்பட பல போட்டிகள், அடுத்து நடக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.இதனால், சுற்றுலா மேம்பாடு அடைவதோடு, பொருளாதாரமும் வளர்ச்சியடையும் என, அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.20 அடி உயரத்தில் காற்றாடி பறக்கும்சர்வதேச காற்றாடி திருவிழாவில் இந்தியா, அமெரிக்கா, சிங்கப்பூர், மலே யா, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளின், 80 காற்றாடி கலைஞர்கள், பிரமாண்ட வண்ண காற்றாடிகள் பறக்க விடுகின்றனர். தமிழக கலாசாரம் கருதி, மாமல்லபுரம் கடற்கரை கோவில், திருவள்ளுவர் உருவம், ரசிகர்களை கவரும் யானை, குதிரை உள்ளிட்ட விலங்குகள், பறவைகள், கார்ட்டூன் வடிவங்களில் காற்றாடிகள் பறக்கவிடப்பட உள்ளன.

பாராசூட்டில் பயன்படுத்தும் நைலானில் தயாரிக்கப்பட்ட, 3 அடி முதல் 20 அடி உயரம் காற்றாடிகள் பறக்க விடப்படும். காலை 11:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை, ரசிகர்கள் கண்டு ரசிக்கலாம். மூன்று நாட்கள் இரவில், அரங்கங்களில் பல்வேறு வகையான வித்தியாசமான உணவு வகைகளை ருசிக்கலாம்.
பன்னாட்டு இசையை ரசிக்கலாம். பிரமாண்ட காற்றாடி செய்முறை விளக்கம் காணலாம். பெரியவர்களுக்கு, தலா 150 ரூபாய் நுழைவுக்கட்டணம் உண்டு. சிறுவர்களுக்கு இலவசம். விபரங்களுக்கு, www.tnikf.com என்ற இணையதளத்தை காணலாம்.பறவைகளுக்கு பாதிப்பு?காற்றாடி விழா நடத்த 15 ஏக்கர் திறந்தவெளி இடம், காற்றாடி கலைஞர்கள் தங்க இடம் என, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் பங்களிக்கிறது. ரசாயனம், மாஞ்சா கலந்த காற்றாடி பறக்கவிடுவதால், பறவைகள், விலங்கிற்கு பாதிப்பு ஏற்படலாம் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அதிருப்தி தெரிவித்தனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (8)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ganapathy Subramanian - Muscat,ஓமன்
11-ஆக-202217:05:32 IST Report Abuse
 Ganapathy Subramanian இசிஆர் ரோட்டில் முக்கிய காலி மனைகள் எல்லாம் ஜி ஸ்கொயர் கம்பெனியிடம் தான் உள்ளது என்பது எல்லோருக்கும் தெரியும். அவர்களே ரேடியோ விளம்பரத்தில் ஈசிஆர் ரோட்டில் நிலம் வாங்க அவர்களிடம் வாருங்கள் என்று சொல்கிறார்கள். மல்லையை முன்னிலை படுத்தி விளம்பரம் செய்தால் இவர்களுக்கு லாபம் தானே?
Rate this:
Cancel
பச்சையப்பன் கோபால் புரம் ஆக ஆக ஆஹா ! ஆத்தாடி ! தளபதி காத்தாடி விடப் போகிறார்!!!காத்தாடி போட்டியில் பங்கு கொண்டு எங்கள் இன்பாண்ணா நோ பல் பரிசு வெல்லப் போகிறார்.
Rate this:
Cancel
11-ஆக-202213:16:09 IST Report Abuse
அப்புசாமி விடியாமூஞ்சிக் காத்தாடியும், குன்றிய மூஞ்சி காத்தாடியும் டீல் விட்டு மோதப்போகுது. களம் அதே மாமல்லபுரம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X