இந்து மக்கள் கட்சி மீது கோவை போலீஸ் வழக்கு | கோயம்புத்தூர் செய்திகள் | Dinamalar
இந்து மக்கள் கட்சி மீது கோவை போலீஸ் வழக்கு
Added : ஆக 11, 2022 | |
Advertisement
 

கோவை : முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் அவரது குடும்பத்தினர் பற்றி, தரக்குறைவான வீடியோ வெளியிட்டதாக கூறி, இந்து மக்கள் கட்சியினர் மீது, வழக்கு பதியப்பட்டுள்ளது.

தி.மு.க., தகவல் தொழில்நுட்ப பிரிவு பெரிய கடைவீதி பகுதி நிர்வாகியாக பணியாற்றி வருபவர் சரவணன், 42. இவர், பெரியகடைவீதி போலீசில் ஒரு புகார் தெரிவித்திருந்தார்.சமூக வலைதளத்தில், 'இந்து மக்கள் கட்சி அபீசியல்' என்ற கணக்கில் இருந்து, முன்னாள் முதல்வர் கருணாநிதி, அவரது குடும்பத்தினர் பற்றிய சர்ச்சைக்குரிய அவதுாறான வீடியோவை வெளியிட்டுள்ளதாக, புகாரில் சரவணன் தெரிவித்திருந்தார்.புகாரை விசாரித்த எஸ்.ஐ., சின்னதுரை, இரண்டு சட்டப்பிரிவுகளில் இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் மீது வழக்கு பதிந்தார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X