பழுதான 'சி.சி.டி.வி.,' கேமராக்கள் சீரமைக்கப்படுமா?; குற்றவாளிகளை பிடிப்பதில் சிக்கல்
Added : ஆக 11, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Latest district News

கடலுார்-குற்ற சம்பவங்களை கண்காணிக்கவும், குற்றவாளிகளை அடையாளம் காணவும் போலீசாரால் அமைக்கப்பட்ட 'சி.சி.டி.வி.,' கேமராக்கள் பழுதாகி பயனற்றதாகிவிட்டதால், மாவட்டத்தில் குற்றவாளிகள் எளிமையாக தப்பிச்செல்லும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.



தமிழகத்தில் 'கிரைம்' மாவட்டம் என்ற அவப்பெயரை, கடந்த காலங்களில் பெற்றிருந்தது கடலுார் மாவட்டம். திறமையான போலீஸ் அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கையால், கொலை, கொள்ளை, திருட்டு என, குற்ற சம்பவங்கள் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டன. போலீஸ் அதிரடிக்கு பயந்து, குற்றவாளிகள் பலரும் வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களுக்கு ஓடி ஒளிந்தனர்.

ஆனால், சமீப காலமாக கடலுார் மாவட்டத்தின் நிலை தலைகீழாக மாறியுள்ளது. கொலை சம்பவங்கள் அடிக்கடி நடந்தாலும், கொள்ளை, திருட்டுக்கள் நடக்காத நாட்களே இல்லை. மக்கள் வெளியூர் செல்வதற்கு மட்டுமின்றி, சாலையில் நடமாடவே அஞ்சுகின்றனர்.அதேபோன்று, தடை செய்யப்பட்ட கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதை வஸ்துக்கள் விற்பனையும் தாராளமாக நடப்பதால், இளைஞர்கள் மட்டுமின்றி, கல்லுாரி, பள்ளி மாணவர்கள் பலரும் இதற்கு அடிமையாகி, சீரழித்து வருகின்றனர்.

குற்றங்களை தடுக்க வேண்டிய போலீசாரும் ஏனோ அமைதி காத்து வருகின்றனர். முக்கியமாக, குற்ற சம்பவங்களை கண்காணித்து, குற்றவாளிகளை அடையாளம் காண, 'சி.சி.டி.வி.,' கேமராக்கள் மாவட்டம் முழுவதும் நிறுவப்பட்டன.ஆரம்பத்தில், மக்கள் கூடும் ரயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள், முக்கிய நகர வீதிகளில் போலீசார் சார்பில் அமைக்கப்பட்டன. அதனை கண்காணிக்க எஸ்.பி., அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டது.

அடுத்து, அந்தந்த போலீஸ் நிலையத்தில் இருந்தும் கண்காணிக்கப்பட்டன. அதே போன்று ஒவ்வொரு பஸ் நிலையத்திலும் கட்டுப்பாட்டு அறை அமைத்து கண்காணிக்க போலீசார் நியமிக்கப்பட்டனர். இது, கைமேல் பலனையும் கொடுத்தது.எந்த இடத்தில் குற்ற சம்பவங்கள் நடந்தாலும், சி.சி.டி.வி., உதவியுடன் குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டு, உடனடியாக கைது செய்யப்பட்டனர்.

இதனால், தனியார் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்க போலீசார் அறிவுறுத்தினர்.அதன்படி, தற்போது கண்காணிப்பு கேமராக்கள் அதிக அளவில் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், போலீசார் சார்பில், அமைக்கப்பட்ட கேமராக்கள் முறையாக பராமரிக்கப்படாமல், செயலிழந்து, பயனற்றதாக உள்ளது. மாவட்டம் முழுவதும் இதே நிலைதான் உள்ளது.குற்ற சம்பவங்கள் அதிகம் நடந்தபோதும், சி.சி.டி.வி., கேமராக்கள் சீரமைக்கப் படவில்லை. பல இடங்களில் கேமராக்கள் காட்சி பொருளாக உள்ளதுடன், பெரும்பாலான இடங்களில் கேமரா இருந்த தடயமே இல்லாத அளவில், ஒயர் மட்டுமே மிஞ்சியுள்ளது.இதனால், குற்றவாளிகளை அடையாளம் காண்பதில் போலீசார் தடுமாறி வருகின்றனர். குற்றவாளிகளும் தைரியமாக குற்ற சம்பவங்களை அறக்கேற்றி வருகின்றனர்.சி.சி.டி.வி., கேமராக்கள் பொருத்துமாறு காவல்துறை சார்பில், வலியுறுத்தப்பட்டு வருகிறது. தனியார் அமைப்புகளை கேமரா அமைக்க ஊக்குவிக்கும் போலீஸ் துறை, தங்கள் சார்பில் வைத்துள்ள கேமராக்களை சீரமைக்க தவறி விட்டது.கடலுார் ஆல்பேட்டை செக்போஸ்டில், மதுபான கடத்தலை தடுக்கும் போலீசார் தவறிழைப்பதாக வந்த அடுத்தடுத்த புகாரையடுத்து, அங்கு, ஆடியோ பதிவாகும் வகையில், தரமான சி.சி.டிவி., கேமரா அமைக்கப்பட்டது.

ஆனால், அவை உடனடியாக செயலிழந்துவிடும். கடலுார் சப் ஜெயில் ரோடில் 3 பக்கமும் பார்க்கும் வகையில் புதிய ேகமராக்கள் பொருத்தப்பட்டன. ஆனால், கேமராக்களை காணவில்லை. கம்பம் மட்டுமே உள்ளது. பழைய கேமராக்கள் பழுதடைந்து செயல்படாமல் இருப்பது ஒரு புறமிருந்தாலும், புதிய கேமராக்கள் அமைக்கும் பணியில் தொடர்ந்து போலீசாரின் ஆர்வம் குறையவில்லை.மாவட்டம் முழுவதும், 9 சட்டசபை தொகுதிகளிலும், அந்தந்த எம்.எல்.ஏ.,க்கள் தொகுதி மேம்பாட்டு நிதியில், சி.சி.டி.வி., கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டு வருகிறது. கலெக்டர் ஒப்புதலுடன், தொகுதிக்கு சுமார் 100க்கு குறையாமல், மாவட்டம் முழுவதும் அமைக்கப்படுகிறது.

வாகனங்கள் செல்வதை கண்காணிப்பதோடு வாகன பதிவு எண்களை பதிவு செய்யும் வகையில், நவீன வசதியுடன் அமைக்கப்படுகின்றன.புதிய கேமராக்கள் பொருத்துவதில் போலீசார் காட்டும் ஆர்வத்தை, செயலிழந்த கேமராக்களை சீரமைப்பதிலும் காட்டினால், கடலுார் மாவட்டத்தில், குற்ற சம்பவங்கள் குறையவும், குற்றவாளிகளை அடையாளம் காணவும் வசதியாக இருக்கும்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X