பெயரளவில் மகளிர் ஸ்டேஷன்; தவியாய் தவிக்கும் பெண்கள்
Added : ஆக 11, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Latest district News



சாணார்பட்டி : -சாணார்பட்டியில் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன் திறக்கப்பட்டு ஒன்றரை மாதங்களுக்கு மேலாகியும் போதுமான போலீசார் நிரப்பப்படாமலும், கணினி இருந்தும் வழக்குப்பதிவு செய்ய வசதி இல்லாமல் பெயரளவுக்கு செயல்படுவதால் போலீஸ் ஸ்டேஷனுக்கு வரும் பெண்கள் அலைக்கழிக்கப்படுகின்றனர்.



நத்தம் தொகுதியில் அனைத்து மகளிர் ஸ்டேஷன் திறப்பதற்கு முன் நத்தம், சாணார்பட்டி,செந்துறை உள்ளிட்ட கிராம மக்கள் 70 கி.மீ., வரை கடந்து வடமதுரை மகளிர் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று வந்தனர். மகளிர் ஸ்டேஷன் இல்லாததால் குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்களும் அதிக அளவில் நிகழ்ந்து வந்தது. இது தொடர்பாக தினமலர் நாளிதழில் பலமுறை செய்தி வெளியானது.இதையடுத்து சாணார்பட்டியில் அனைத்து மகளிர் ஸ்டேஷன் ஜூன் 16ல் முதலமைச்சரால் காணொலி காட்சி மூலம் திறந்து வைக்கப்பட்டது.

தற்போது இங்கு நியமிக்கப்பட்ட இன்ஸ்பெக்டர் தொடர் விடுப்பில் உள்ளதால் ஒட்டன்சத்திரம் இன்ஸ்பெக்டர் பொறுப்பு இன்ஸ்பெக்டராக செயல்படுகிறார். மேலும் ஒரு எஸ்.எஸ்.,முதன்மை காவலர்கள் என குறைவான போலீசாரே நியமிக்கப்பட்டுள்ளனர். ஸ்டேஷனில் வழக்கு பதிவு செய்வதற்காக கணினி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் அக் கணினியில் வழக்கு பதிவு செய்வதற்கான இணைப்பு, வசதிகள் தற்போது வரை இல்லை. அருகில் உள்ள போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று வழக்குப்பதிவு செய்ய வேண்டிய நிலை உள்ளது.

நேற்று முன்தினம் நத்தத்தில் பெண் குழந்தைக்கு எதிரான நடந்த குற்றத்தில் ஒருவர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டது குறிப்பிடப்பட்டது. தொடர்ந்து நேற்று பள்ளி சிறுமிக்கு எதிரான பாலியல் புகார் விசாரணையில் உள்ளது. இது போன்ற சிறு வயது திருமணம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்கிறது. திறக்கப்பட்டு பெயரளவில் செயல்படும் சாணார்பட்டி அனைத்து மகளிர் ஸ்டேஷனுக்கு தேவையான போலீசாரை நியமித்து போதி வசதிகளையும் ஏற்படுத்தி தருவது அவசியமாகிறது.



நீண்ட நேரம் காத்திருப்பு



ப.சிவா, பேரூராட்சி எதிர்க்கட்சித் தலைவர், (அ.தி.மு.க.,) நத்தம்: நத்தம் தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்தது அனைத்து மகளிர் ஸ்டேஷன். சாணார்பட்டியில் திறக்கப்பட்டு வழக்குப்பதிவு செய்யும் வசதி, போதுமான போலீசார் நியமிக்கப்படாததால் பெயர் அளவுக்கு மட்டுமே செயல்படுகிறது.இதனால் புகார் அளிக்க வரும் பெண்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவல நிலை உள்ளது. இங்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்து ஸ்டேஷனை முழுமையாக செயல்படுத்த எஸ்.பி., நடவடிக்கை எடுக்க வேண்டும்.



குற்றங்கள் அதிகரிக்க வாய்ப்பு



சோ.ஆனந்த கிருஷ்ணன்,மாநில துணைத்தலைவர், ப.ஜ., தகவல் தொழில்நுட்ப பிரிவு, வேம்பார்பட்டி: ஸ்டேஷன் திறக்கப்பட்டு ஒன்றரை மாதங்களுக்கு மேலாகியும் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படாமல் உள்ளது. புகார் அளிக்க வரும் பெண்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவல நிலை உள்ளது. வழக்கு பதிய மற்ற ஸ்டேஷன்களுக்கு செல்ல வேண்டி உள்ளதால் புகார் அளிக்க வரும் பலர் வெகு துாரம் கடந்து வடமதுரை ஸ்ேடஷன் சென்று வருகின்றனர். இதனால் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.



இஸ்ஸ்பெக்டரும் இல்லை



தனபால், மாவட்டச் செயலாளர், ப.ஜ., ஒ.பி.சி., அணி: அதிகளவு பொதுமக்கள் புகார் அளிக்க இங்கு வந்து செல்கின்றனர். ஆனால் இங்கு குறைவான பெண் போலீசாரே பணியில் உள்ளனர். போலீசாருக்கு அதிக வேலைப்பளு ஏற்படுகிறது. வேறு போலீஸ் ஸ்டேஷனில் உள்ள இன்ஸ்பெக்டரே கூடுதல் பொறுப்பில் பணி செய்கிறார். சாணார்பட்டி மகளிர் ஸ்டேஷனுக்கு தனியாக இன்ஸ்பெக்டர் நியமிக்க வேண்டும்.



தேவையான போலீசார் நியமனம்



அருண் கபிலன், டி.எஸ்.பி., திண்டுக்கல்: சாணார்பட்டி மகளிர் ஸ்டேஷனுக்கு வழக்குப் பதிவு செய்ய கணினிகள் நிறுவப்பட்டுள்ளது. வழக்குப்பதிவு இணைப்பு வழங்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. முறையான அனுமதி வந்தவுடன் தேவையான போலீசாரும் நியமிக்கப்படுவர்,என்றார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X