கரும்பு பயிர்களுக்கு இடையே சடலம் எடுத்து சென்று அடக்கம் | கடலூர் செய்திகள் | Dinamalar
கரும்பு பயிர்களுக்கு இடையே சடலம் எடுத்து சென்று அடக்கம்
Added : ஆக 11, 2022 | |
Advertisement
 

விருத்தாசலம்-விருத்தாசலம் அருகே மயான பாதையை ஆக்கிரமித்து சாகுபடி செய்திருந்த கரும்பு பயிர்களுக்கு இடையே பெண்ணின் சடலத்தை எடுத்துச் சென்று அடக்கம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.விருத்தாசலம் அடுத்த பரவளூர் ஊராட்சியில் 200க்கும் மேற்பட்ட இருளர் குடும்பத்தினர் வசிக்கின்றனர். இப்பகுதியில் இறப்பவர்களின் சடலங்களை அடக்கம் செய்யும், மாயான பாதையை தனி நபர்கள் ஆக்கிரமித்து விவசாயம் செய்து வருகின்றனர்.இதனால், சடலங்களை எடுத்துச் செல்ல முடியமால் அப்பகுதி மக்கள் அவதியடைந்தனர். இதனால், தற்காலிகமாக மணிமுக்தாற்றில் சடலங்களை அடக்கம் செய்தனர்.இதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்ததால், மயானப் பாதையை மீட்டு தரக் கோரி, அதிகாரிகளிடம் மனு கொடுத்தனர். இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை. இந்நிலையில், நேற்று அப்பகுதியைச் சேர்ந்த ஜெயபாரதி மனைவி ரம்யா, 27, என்பவர் உடல் நலக்குறைவால் இறந்தார். அவரது உடலை மயானத்தில் அடக்கம் செய்ய உறவினர்கள் முடிவு செய்தனர்.இதனால், பாதுகாப்பு கேட்டு, தாசில்தார் தனபதியிடம் மனு அளித்தனர். இதையடுத்து அப்பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.ஆக்கிமிப்பு பாதையில் சாகுபடி செய்யப்பட்டிருந்த கரும்பு பயிர்கள் வழியாக சடலத்தை கொண்டு சென்று உறவினர்கள் அடக்கம் செய்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X