அதிகாரிகள் பேச்சுவார்த்தை குடியேறும் போராட்டம் வாபஸ்
Added : ஆக 11, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 



திட்டக்குடி-திட்டக்குடியில், அதிகாரிகள் பேச்சு வார்த்தையை அடுத்து, பா.ஜ., குடியேரும் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.திட்டக்குடி பேரூராட்சியாக இருந்தபோது, பிரதம மந்திரியின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் 30க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு வீடு கட்ட ஆணை வழங்கப்பட்டது.அதனடிப்படையில் பயனாளிகள் வீடு கட்டும் பணியை துவக்கினர். ஆனால் கடந்த ஒன்றரை வருடங்களாக அந்த பயனாளிகளுக்கு தர வேண்டிய நிதி முறையாக வழங்கவில்லை.இதைக் கண்டித்து பா.ஜ., சார்பில் திட்டக்குடி நகராட்சி அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து திட்டக்குடி நகராட்சி அலுவலகத்தில் கமிஷனர் ஆண்டவன் தலைமையில் நேற்று அமைதி பேச்சு வார்த்தை நடந்தது.திட்டக்குடி சப் இன்ஸ்பெக்டர் பாக்கியராஜ், பா.ஜ., நகர தலைவர் பூமிநாதன் மற்றும் நிர்வாகிகள், பயனாளிகள் பங்கேற்றனர்.கூட்டத்தில் தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு வாரியத்தில் இருந்து பயனாளிகள் பட்டியலை ஒப்படைக்க கடிதம் பெறப்பட்டுள்ளது.அதனடிப்படையில் பயனாளிகள் பட்டியல் ஒப்படைக்கப்பட்டு, நிலுவைத்தொகை வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதையேற்று போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X