நிலத்தடி நீர்மட்டம் சரிவு: ஏரிகளில் நீர் கையிருப்பால் பற்றாக்குறை இருக்காது!
Updated : ஆக 11, 2022 | Added : ஆக 11, 2022 | கருத்துகள் (6) | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 

சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களில், ஜூன் மாதத்தை விட, ஜூலை மாதத்தில் நிலத்தடி நீர் மட்டம், ஒரு அடி குறைந்துள்ளது. கடந்த ஆண்டு ஜூலை மாதத்தை ஒப்பிடும் போது, 6 அடி உயர்ந்துள்ளது.


குடிநீர் வழங்கும் ஏரிகளில் போதுமான நீர் இருப்பு உள்ளதால், சென்னைக்கு பற்றாக்குறை இல்லாமல் குடிநீர் வழங்க முடியும் என, குடிநீர் வாரிய அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.latest tamil news210 நீர்நிலைகள்மக்கள் தொகை அதிகரிப்பு, நீர்நிலைகள் அபகரிப்பு மற்றும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை முறையாக பராமரிக்காதது போன்ற காரணங்களால், நிலத்தடியில் போதிய நீர் தங்குவதில்லை.விரிவாக்கத்திற்கு முந்தைய மாநகராட்சியில் ஏரி, குளங்கள் பெரிய அளவில் இல்லை. 2011ம் ஆண்டு விரிவாக்கத்திற்குப் பின், சென்னையைச் சுற்றி உள்ள பல ஏரி, குளங்கள் மாநகராட்சி கட்டுப்பாட்டில் வந்தன.

இதில், 210 நீர்நிலைகள் கண்டறியப்பட்டு, கடந்த ஆட்சியில் 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் மேம்படுத்தப்பட்டன. கால்வாய், வடிகால் கட்டமைப்புகளும் சீரமைக்கப்பட்டன.வடிகால் உள்பகுதி, சாலையோரம், பூங்கா என, 2,450 உறை கிணறுகள் அமைக்கப்பட்டன. இதையடுத்து, தண்ணீர் பஞ்சம் ஏற்படாத வகையில், ஓரளவு நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்தது.

சென்னை மணல், களிமண், பாறைகளால் ஆன அடுக்குகளைக் கொண்ட நிலப்பரப்பு.இதனால், நிலத்தடி நீரை கணக்கிட, 200 வார்டிலும் நிலத்தடி நீர் அளவுமானிகள் அமைக்கப்பட்டு உள்ளன.சென்னையிலுள்ள 15 மண்டலங்களில், கோடை வெயில் சுட்டெரித்ததால், கடந்த மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில், நிலத்தடி நீர் மட்டம் குறைந்து கொண்டே வந்தது.நம்பிக்கைஜூன் மாதம் பெய்த எதிர்பாராத கன மழையால், 6 அடி வரை நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்தது.இந்நிலையில், 15 மண்டலங்களில் ஜூன் மாதத்தை விட, ஜூலை மாதத்தில் நிலத்தடி நீர்மட்டம், சில மண்டலங்களில் ஒரு அடி குறைந்தது. இதில் சோழிங்கநல்லுார் உள்ளிட்ட, 8 மண்டலங்களில், 3 அடி வரை உயர்ந்துள்ளது.மணலி உள்ளிட்ட 7 மண்டலங்களில், ஒன்றரை அடி வரை குறைந்து உள்ளது.


அதே வேளையில், 2021 ஜூலை மாதத்தை விட, 2022 ஜூலையில், 15 மண்டலங்களிலும் சேர்த்து நிலத்தடி நீர் மட்டம், 6 அடி வரை உயர்ந்துள்ளது.இதனால், கடந்த ஆண்டை போல், ஆழ்துளைக் கிணறுகளில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படவில்லை.மேலும், ஏரிகளிலும் போதிய நீர் இருப்பு உள்ளதால், சென்னையின் குடிநீர் தேவையை பற்றாக்குறையின்றி பூர்த்தி செய்ய முடியும் என, குடிநீர் வாரிய அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

ஜூன் மாதத்தில் பெய்த மழையால் 6 அடியாக உயர்ந்த நீர்மட்டம், ஜூலை மாதத்தில் ஒரு அடி குறைந்து, 5 அடியாக இருந்தது. ஏரிகளில் போதிய அளவு நீர் உள்ளதால், சென்னையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முடியும். பருவ மழைக்கு முன் பொதுமக்கள், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை முறையாக பராமரித்து, தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். இவ்வாறு செய்வதால், வழக்கத்தை விட நிலத்தடி நீர்மட்டம் உயரும்.
- குடிநீர் வாரிய அதிகாரிகள்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (6)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Emperor SR - Ooty,இந்தியா
11-ஆக-202220:13:14 IST Report Abuse
Emperor SR "இதில், 210 நீர்நிலைகள் கண்டறியப்பட்டு, கடந்த ஆட்சியில் 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் மேம்படுத்தப்பட்டன" - கடந்த ஆட்சியில் ஓரளவு நல்ல திட்டங்களே கொண்டுவரப்பட்டன.. இந்த மடியில் ஆட்சியில் ஒட்டுமொத்தமாக வாரி சுருட்டும் திட்டங்கள் தான் விடியல் தலைவரும் ரவுடி அமைச்சர்களும் கழக குடும்ப கம்பெனிக்காகவும் கழக உபி களுக்காகவும் மட்டுமே வகுப்பட்டு சுருட்டல் சூப்பராக நடைபெற்று கொண்டிருக்கிறது... வோட்டை விற்ற சென்னை மாநகரவாசிகளுக்கு தேவையா என்று சிந்திக்கவும்
Rate this:
Cancel
11-ஆக-202214:24:58 IST Report Abuse
ஆரூர் ரங் கூவம் நாற்றமெடுக்கும் கழிவுநீர் ஓடையாக ஆனது பூண்டி நீர்த்தேக்கம் கட்டப்பட்ட காரணத்தால்தான் .😛 நீர்த்தேக்கம் நீரைத் தடுத்துவிட்டதால் ஆறு வறண்டு குப்பைத் தொட்டியாகி சாக்கடைகள் கலந்து நோய்களின் பிறப்பிடமாகவும் ஆகிவிட்டது (ஆற்றில் நீர்வரத்துக்கு வழி செய்யாமல் மணக்க வைக்க காண்ட்ராக்ட் கொடுத்து சுரண்டினார் கருணாநிதி. இல்லாத முதலை அதில் வாழ்ந்ததாக கதை விட்டு நிதியை சாப்பிட்டார்). பூண்டி நீரில் ஓரளவாவது கூவத்தில் விட வேண்டும்..இயலாதென்றால் ஆற்றை மேடாக்கி வேறு பயன்பாட்டுக்கு மாற்றி🤔 விடவேண்டும்.
Rate this:
Cancel
Manian - Chennai,ஈரான்
11-ஆக-202209:13:57 IST Report Abuse
Manian எவ்வளவு மழை வெள்ளம்? அதை வழி வகுத்து சேர்க்கலாமே ஐயோ 40% வாங்கராப்பலே மோடி திட்டம் இடமாட்டாரே. ஆங், மக்களே ஊர் ஊரா நமக்கு நாமே திட்டப்படி கால்வாய் வெட்டலாமே அதெப்படி எங்க ஊரு பொறம்போக்கிலே கால்வாயா? நடக்கவே வுடமாட்டொம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X