சி.ஐ.டி.யு., மாவட்ட மாநாடு | தேனி செய்திகள் | Dinamalar
சி.ஐ.டி.யு., மாவட்ட மாநாடு
Added : ஆக 11, 2022 | |
Advertisement
 

தேனி : தேனி சி.ஐ.டி.யு., தொழிற்சங்கத்தின் மாவட்ட மாநாடு தனியார் மஹாலில் நடந்தது. மாவட்ட தலைவர் முருகன் தலைமை வகித்தார்.தேனியில் ரயில் போக்குவரத்து துவங்கியுள்ளதால் ரயில்வே குட்செட் அமைத்திட வேண்டும். மாவட்ட தொழிலாளர் நலவாரியத்தில் தேங்கி கிடக்கும் மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுத்திட வேண்டும். கூட்டுறவு ரேஷன்கடை விற்பனையாளர்களுக்கு சம வேலை, சம ஊதியம் வழங்கிட வேண்டும்

என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டில் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் சுகுமாறன், மாநிலக்குழு உறுப்பினர் சுப்பிரமணியன், மாவட்ட செயலாளர் ராமசந்திரன், பொருளாளர் சண்முகம், விவசாய சங்க மாவட்டச் செயலாளர் கண்ணன், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் சங்கரசுப்பு,கோம்பை முருகேசன், ஜெயபாண்டி, தாஜூதீன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X