யானை தந்தத்தை விற்க முயன்ற டிப்பர் லாரி டிரைவர் கைது | தேனி செய்திகள் | Dinamalar
யானை தந்தத்தை விற்க முயன்ற டிப்பர் லாரி டிரைவர் கைது
Added : ஆக 11, 2022 | |
Advertisement
 
Latest district News



மூணாறு, : யானை தந்தத்தை விற்க முயன்ற குன்னம்குளத்தைச் சேர்ந்த அருணை 34, வனத்துறையினர் கைது செய்தனர்.இடுக்கி மாவட்டம் கட்டப்பனை சுவர்ணகிரியை சேர்ந்த அருண், வாடகை வீட்டில் தங்கி, டிப்பர் லாரி டிரைவராக பணிபுரிந்தார். அவர் யானை தந்தத்தை விற்க முயல்வதாக கட்டப்பனை வனத்துறை பறக்கும் படை அதிகாரி ரோய் வி.ராஜனுக்கு தகவல் கிடைத்தது. அவரது தலைமையில் வனக்காவர்கள் கண்காணித்தனர்.



இந்நிலையில் வல்லகடவில் காருடன் காத்திருந்த அருணின் காரை சோதனையிட்ட போது, யானை தந்தம் கண்டறியப்பட்டது. விசாரணையில் தந்தத்தை விற்க காத்திருந்ததாக தெரியவந்தது. அருணை கைது செய்து வனத்துறையினர் தந்தத்தை பறிமுதல் செய்தனர்.

வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'அருண் தனது சகோதரி கணவர் பிபினுடன் இணைந்து, ஜிதேஷ் என்பரிடம் இருந்து ரூ.6 லட்சம் விலை பேசி ரூ.2.9 லட்சம் முன்பணம் வழங்கி தந்தத்தை வாங்கி உள்ளனர். அதனை ரூ.12 லட்சத்திற்கு விற்க காத்திருந்தபோது வனத்துறையினரிடம் சிக்கியதாக விசாரணையில் தெரிய வந்தது. குமுளி வனத்துறையினரிடம் அருண் ஒப்படைக்கப்பட்டார். தலைமறைவான பிபின், ஜிதேஷ் ஆகியோரை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X