உழவுப்பணி மும்முரம் | தேனி செய்திகள் | Dinamalar
உழவுப்பணி மும்முரம்
Added : ஆக 11, 2022 | |
Advertisement
 
Latest district News


பெரியகுளம் : பெரியகுளம் பகுதியில் பெய்த மழையால் விவசாயிகள் ஆர்வமுடன் நிலத்தை உழும் பணியை மேற்கொண்டுள்ளனர்.பெரியகுளம், தேவதானப்பட்டி, கெங்குவார்பட்டி உட்பட தாலுகா பகுதி முழுவதும் அதிக மழை பெய்துள்ளது. இதனால் விவசாயிகள் ஆர்வமுடன் விவசாய பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.



குறிப்பாக தென்னை மரத்தில் ஊடுபயிராக வாழை பயிரிடுவது பெரியகுளம் பகுதியில் அதிகரித்து வருகிறது. வாழை அறுவடைக்கு பின் டிராக்டர் உழவுப்பணிகள் நடக்கின்றன. இது குறித்து விவசாயி நாராயணசாமி கூறுகையில்: தற்போது பெய்த மழை மாமரம், தென்னை மரம் உட்பட அனைத்து வகையான மரங்களின் ஆணிவேர் வரை நீர் சென்றுள்ளதால் மரங்கள் பலப்படும். மரக்கன்றுகளில் இருந்து வளரும் மரங்களுக்கு மழைநீர் வளர்ச்சிக்கான ஊட்டத்தை கொடுக்கும். தென்னை மரங்களில் நடுவே வாழை பயிரிடும்போது குறைந்த நிர்வாக செலவில் அதிக விளைச்சல் கிடைக்கிறது., என்றார்.-

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X