மழையில் நனைந்த எள் விவசாயிகள் பாதிப்பு | தேனி செய்திகள் | Dinamalar
மழையில் நனைந்த எள் விவசாயிகள் பாதிப்பு
Added : ஆக 11, 2022 | |
Advertisement
 



கூடலுார் : அறுவடை செய்யும் நேரத்தில் தொடர்ந்து மழை பெய்ததால் எள் வரத்து குறைந்தது. அதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.கூடலுார் கழுதைமேடு, பெருமாள் கோயில், காஞ்சிமாத்துறை, கொங்கச்சிப்பாறை உள்ளிட்ட பகுதியில் 500 ஏக்கருக்கும் மேல் எள் சாகுபடியாகிறது. நன்கு விளைந்ததால் கடந்த சில நாட்களாக அறுவடை செய்யப்பட்டு வந்தது. தொடர்ந்து மழை பெய்ததால் அறுவடை செய்த எள்ளை பாதுகாப்பாக வைக்க முடியாத நிலை ஏற்பட்டது.



இதனால் முழுவதும் நனைந்து செடியில் இருந்து எள் பிரிக்க முடியாத நிலை ஏற்பட்டது. மேலும் பல விவசாய நிலங்களில் அறுவடை செய்ய வேண்டிய பக்குவம் இருந்தும் மழையால் தடைப்பட்டது. விலை குவிண்டாலுக்கு ரூ.10 ஆயிரத்திற்கு மேல் இருந்தும், வரத்து மிக குறைவால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X