மாவட்டத்தில் ஆக.13ல்தேசிய மக்கள் நீதிமன்றம் | தேனி செய்திகள் | Dinamalar
மாவட்டத்தில் ஆக.13ல்தேசிய மக்கள் நீதிமன்றம்
Added : ஆக 11, 2022 | |
Advertisement
 



தேனி : தேனி மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில் பெரியகுளம், உத்தமபாளையம், ஆண்டிபட்டி, போடி வட்டார சட்டப் பணிகள் குழுவில் வருகின்ற ஆக.,13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்), மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்ற வளாகங்களிலும் நடக்க உள்ளது.நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி, ஒரு வழக்கறிஞர் உறுப்பினர் கொண்ட அமர்வு முன்னிலையில் வழக்குகள் நடத்தப்பட உள்ளன.



இதில் மோட்டார் வாகன விபத்து இழப்பீடு சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள், சொத்து, பணம் சம்பந்தப்பட்ட உரிமையியல் வழக்குகள், சமரச தீர்வுக்கான குற்ற வழக்குகள், இதர பொது பயன்பாட்டு சேவைக்கான வழக்குகள் போன்றவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளன.பிரச்னைகள் சுமூகமாக தீர்க்க விரும்பும் நபர்கள் தேசிய மக்கள் நீதிமன்றத்தை அணுகி பயனடையலாம் என, தேனி மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு தலைவர் சஞ்சய் பாபா தெரிவித்துள்ளார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X