ரோட்டில் ரசாயன திடக்கழிவு கொட்டிய ஆலைக்கு சீல் | விருதுநகர் செய்திகள் | Dinamalar
ரோட்டில் ரசாயன திடக்கழிவு கொட்டிய ஆலைக்கு சீல்
Added : ஆக 11, 2022 | |
Advertisement
 
Latest district News



விருதுநகர், : விருதுநகரில் பாதுகாப்பற்ற முறையில் ரசாயன திடக்கழிவுகளை ரோட்டில் கொட்டிய ஆலைக்கு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தினர் சீல் வைத்தனர்.விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பாலவநத்ததில் இருந்து கோபாலபுரம் செல்லும் ரோட்டோரத்தில் ரசாயன திடக்கழிவுகள் கொட்டப்பட்டன. இது குறித்து அப்பகுதி மக்கள் கலெக்டரிடம் புகார் செய்தனர்.



இதையடுத்து மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் சண்முகம், உதவி பொறியாளர் கலைஜோதி திடக் கழிவுகள் கொட்டப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்தனர்.இதில் வலுக்கலொட்டியில் 10 ஆண்டுக்கு முன் இயங்கி வந்த ரசாயன தொழிற்சாலை மூடப்பட்ட அந்த இடத்தை ஒரு நபர் வாங்கி அதில் உள்ள ரசாயன கழிவை ரோட்டில் கொட்டியது தெரிந்தது.மேலும் நில உரிமையாளரிடம் ரசாயன கழிவுகளை பாதுகாப்பான முறையில் வெளியேற்ற அறிவுறுத்தியும் அவர் பின்பற்றவில்லை. எனவேமாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தினர் ஆலையின் மின்இணைப்பை துண்டித்து வளாகத்திற்கு சீல் வைத்தனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X