செய்திகள் சில வரிகளில் சேலம்
Added : ஆக 11, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 

லாட்டரி வியாபாரிகளுடன்
கைகோர்த்த ஏட்டு 'சஸ்பெண்ட்'
சேலம், ஆக. 11-
சேலத்தில் குட்கா, சந்துக்கடை, லாட்டரி விற்பனை கும்பலுடன் கைகோர்த்து செயல்படும் போலீசார் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என, போலீஸ் கமிஷனர் நஜ்முல் ேஹாதா எச்சரித்திருந்தார். கடந்த, 6ல், சூரமங்கலம் குற்றப்பிரிவு ஏட்டு முனியன், 48, லாட்டரி வியாபாரி

களுடன் கைகோர்த்ததாக புகார் எழுந்தது.
இதுகுறித்து விசாரணைக்கு பின், அவரை, 'சஸ்பெண்ட்' செய்து, கமிஷனர் நஜ்முல் ேஹாதா, நேற்று முன்தினம் உத்தரவிட்டார். இதன் மூலம், 10 நாளில் சட்டவிரோத கும்பலுடன் கைகோர்த்தாக சஸ்பெண்ட் செய்யப்பட்டோர் எண்ணிக்கை, 3 ஆக உயர்ந்துள்ளது.
இன்று 'போதை' விழிப்புணர்வு
சேலம்: சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளில், இன்று காலை, 10:30 மணிக்கு, போதை விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்க வேண்டும்; கல்வி தொலைக்காட்சியில் நேரலையில் ஒளிபரப்பப்படும் விழிப்புணர்வு குறும்படத்தை மாணவ, மாணவியருக்கு காட்டவும், முதன்மை கல்வி அலுவலர் முருகன் உத்தரவிட்டுள்ளார். தொடர்ந்து ஆக., 19 வரை, பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி, போதை விழிப்புணர்வு வார விழாவை கொண்டாட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கலெக்டர் ஆபீசில் 10 பேர் தர்ணா
சேலம்: ஓமலுார், தாத்தையங்கார்பட்டி அடுத்த செங்கரட்டை சேர்ந்த லாரி டிரைவர் நாகராஜ், 32. அவர் உள்பட, 10 பேர் நேற்று மனு கொடுக்க கலெக்டர் அலுவலகம் வந்தனர். பின், கலெக்டர் வாகனம் நிறுத்தும் இடத்தில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். அப்போது நாகராஜ் கூறுகையில், 'பிளஸ் 1 படிக்கும், உறவினர் மகளான, 16 வயது மாணவியை மறித்து, காந்தி நகரை சேர்ந்த பிரேம்குமார், 23, கேலி கிண்டல் செய்கிறார். இதுகுறித்து சூரமங்கலம் மகளிர் போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. மாறாக, வாலிபரின் உறவினர்கள் வீடுதேடி வந்து கொலை மிரட்டல் விடுத்து தாக்கிவிட்டு சென்றனர். இதுகுறித்து கருப்பூர் போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. குற்றவாளிகளுக்கு ஆதரவாக போலீசார் செயல்படுவதால், நியாயம் கிடைக்கவில்லை. அதனால் கலெக்டர் அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்டோம்' என்றார்.
அஞ்சல் ஊழியர் ஆர்ப்பாட்டம்
சேலம்: புது பஸ் ஸ்டாண்ட், கிழக்கு கோட்ட தலைமை அஞ்சலகம் முன், அனைத்திந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. அஞ்சல் துறையை தனியார் மயமாக்கும் நடவடிக்கையை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, கோட்ட பி.3 செயலர் துரை பாண்டியன் தலைமை வகித்தார். அதில் அஞ்சல்துறையை கார்ப்பரேட் மயமாக்கும் திட்டத்தை நிறுத்தக்கோரி மத்திய அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். பி.4 செயலர் லோகநாதன், கிராம அஞ்சல் ஊழியர் சங்க செயலர் ராமு ஆகியோர், 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். பி.எஸ்.என்.எல்., ஊழியர்கள், ஓய்வூதியர்கள், ஆர்ப்பாட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து பங்கேற்றனர்.
ஆலயம் முன் கறுப்பு கொடி
ஆத்துார்: ராணிப்பேட்டை, புனித ஜெயராக்கினி அன்னை ஆலயம் முன் உள்ள கம்பத்தில், ஆத்துார் மறை வட்ட போதகர் கிரகோரிராஜன், நேற்று கறுப்பு கொடி ஏற்றினார். அப்போது, 'மதம் மாறிய தலித் கிறிஸ்தவர்களுக்கு எஸ்.சி., அந்தஸ்து வழங்கக்கூடாது என, 1950 ஆக., 10ல், குடியரசு தலைவர் பிறப்பித்த உத்தரவு அநீதியானது. இந்நாளை கறுப்பு தினமாக அனுசரிக்கிறோம்' எனக்கூறி, பலரும், சட்டையில் கறுப்பு பேட்ஜ் அணிந்து கண்டன கோஷமிட்டு கலைந்து சென்றனர்.
மாவட்டத்தில் 52 பேருக்கு தொற்று
சேலம்: சேலம் மாவட்டத்தில் நேற்று, 52 பேருக்கு தொற்று உறுதியானது. அதில், சேலம் மாநகராட்சியில், 26 பேர், கெங்கவல்லி, 6, காடையாம்பட்டி, 4, தலைவாசல், சங்ககிரி தலா, 3, மேட்டூர் நகராட்சி, ஆத்துார், வீரபாண்டி, ஓமலுார் தலா, 2, இடைப்பாடி, தாரமங்கலம் தலா ஒருவர் என, மாவட்டத்தில், 52 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தி.மு.க., நிர்வாகிகள் தேர்வு
சேலம்: மத்திய மாவட்ட, தி.மு.க.,வில், மாநகர் நிர்வாகிகள் தேர்தலில், 16 பதவிக்கு, சேலம் புது பஸ் ஸ்டாண்ட் எதிரே உள்ள, கட்சி அலுவலகத்தில், 17 பேர் வேட்புமனு வழங்கினர். அதில் ஒருவர் மனு தள்ளுபடி செய்யப்பட்டு, 16 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவித்து, அதற்கான சான்றிதழ் நேற்று வழங்கப்பட்டது. தேர்தல் ஆணையர் அழகிரி சதாசிவம், மத்திய மாவட்ட செயலரான, எம்.எல்.ஏ., ராஜேந்திரன் இணைந்து சான்றிதழ் வழங்கினர். அதன்படி மாநகர் செயலராக ரகுபதி, அவைத்தலைவர் முருகன், பொருளாளர் ெஷரீப், துணை செயலர்கள் கணேசன், தினகரன், கோமதி, மாவட்ட பிரதிநிதிகளாக, 10 பேர் சான்றிதழ் பெற்றுக்கொண்டனர்.
நாளை மின் குறைதீர் கூட்டம்
சேலம்: சேலம் மின் பகிர்மான வட்டம், வாழப்பாடி கோட்டத்தில் நாளை காலை, 11:00 மணிக்கு, சிங்கிபுரம் துணை மின்நிலைய வளாகத்தில் குறைதீர் கூட்டம் நடக்க உள்ளது. அதில் மின் நுகர்வோர், மேற்பார்வை பொறியாளரிடம் குறைகளை தெரிவித்து பயன்பெறலாம் என, வாழப்பாடி கோட்ட செயற்பொறியாளர் முல்லை
கேட்டுக்கொண்டுள்ளார்.
பெண் உறுப்பினர் இறப்பு
கணவருக்கு 'காப்பு'
வாழப்பாடி, ஆக. 11--
பெத்தநாயக்கன்பாளையம், ஆரியபாளையத்தை சேர்ந்தவர் வெற்றிவேல், 29. தனியார் வங்கியில், கலெக் ஷன் மேலாளராக பணிபுரிகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் ரம்யா, 26. பி.எட்., முடித்த இவர், ஆரியபாளையம் ஊராட்சியில், 2வது வார்டு உறுப்பினராக இருந்தார். இவர்களுக்கு, கடந்த ஜூன், 13ல் திருமணமானது. நேற்று முன்தினம், ரம்யா தற்கொலை செய்து கொண்டார். ஏத்தாப்பூர் போலீசார் வழக்குப்
பதிந்து விசாரித்தனர். நேற்று, தற்கொலைக்கு துாண்டியதாக, வெற்றிவேலை கைது செய்தனர்.
கடிதம் வைத்துவிட்டு
அரசு ஊழியர் மாயம்
ஆத்துார், ஆக. 11-
கடிதம் எழுதி வைத்துவிட்டு அரசு ஊழியர்
மாயமானார்.
சேலம் மாவட்டம், ஆத்துார், தென்னங்குடிபாளையத்தை சேர்ந்தவர் குமார், 33. இவர், சேலத்தில் உள்ள வணிக வரித்துறை அலுவலகத்தில், கணினி தட்டச்சராக பணிபுரிகிறார். மதுபோதைக்கு அடிமையான இவர், 6 மாதமாக வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார்.
கடந்த, 4ல், 'கண் காணாத இடத்துக்கு செல்கிறேன்; யாரும் தேடவேண்டாம்' என கடிதம் எழுதி வைத்துவிட்டு சென்றுள்ளார். இதுகுறித்து அவரது பெற்றோர் அளித்த புகார்படி, ஆத்துார் ஊரக போலீசார், அரசு
ஊழியரை தேடுகின்றனர்.
2ம் நாள் நடைபயணம்
தங்கபாலு பங்கேற்பு
சேலம், ஆக. 11-
சேலம் மாநகர் காங்., சார்பில், 2ம் நாள் நடைபயணம், ஜாகீர் அம்மாபாளையத்தில் நேற்று தொடங்கியது. மாநகர் தலைவர் பாஸ்கர் தலைமை வகித்தார். காங்., முன்னாள் தலைவர் தங்கபாலு, காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து நடைபயணத்தை தொடங்கி வைத்து வழிநடத்தினார். துணை மேயர் சாரதாதேவி, வர்த்த பிரிவு தலைவர் சுப்ரமணி உள்பட பலர் உடன் வந்தனர். தர்மன் நகர், ஜங்ஷன், மெய்யனுார், 5 ரோடு வழியே சென்றனர்.
அழகாபுரம் திரவுபதியம்மன் கோவில் பகுதியில், காங்., கட்சி கொடியேற்றி, 8 கி.மீ., நடைபயணத்தை நிறைவு செய்தார். 75வது சுதந்திர தினத்தையொட்டி, 75 கி.மீ., நடைபயணத்தில், முதல் நாளில், 20, நேற்று, 8 என, 28 கி.மீ., நடைபயணத்தை முடித்துள்ளனர்.
லாரி மோதி வெடித்த மின்மாற்றி
7 வீட்டில் 'டிவி, ப்ரிட்ஜ்' சேதம்
சேலம், ஆக. 11-
கொண்டலாம்பட்டி அருகே, ஜி.கே.கரட்டூரில் பழைய இரும்பு தொழிற்சாலை உள்ளது. அந்த ஆலைக்கு தேவையான உபகரணங்களை, வடமாநிலத்தில் ஏற்றிக்கொண்டு, ஒரு டாரஸ் லாரி வந்து கொண்டிருந்தது. நேற்று இரவு, 10:45 மணிக்கு, ஆலை அருகே வந்தபோது, அங்குள்ள மின்மாற்றியில் லாரி மோதியது.
அதில் மின்மாற்றி வெடித்து தீப்பொறி உருவானது. இதையடுத்து, உயர் மின்னழுத்தம் ஏற்பட்டு, அப்பகுதியில் உள்ள, 7 வீடுகளில், 'டிவி', ப்ரிட்ஜ் உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் சேதமாகின. இதில் ஒருவர் காயம் அடைந்து அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொண்டலாம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

14 கட்டடங்கள்
இடித்து தரைமட்டம்
மேச்சேரி, ஆக. 11-
மேச்சேரியில் சேலம் செல்லும் நெடுஞ்சாலையை ஆக்கிரமித்து கடைகள், அதன் அருகே உள்ள தெருக்களில் வீடுகள் கட்டப்பட்டிருந்தன. போக்குவரத்து நெரிசல், விபத்துகள் ஏற்பட்டதால், ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றக்கோரி, மேட்டூர், கோனுாரை சேர்ந்த சின்னசாமி, சென்னை உயர்நீதிமன்றத்தில், 2019ல் வழக்கு தொடர்ந்தார். அதில் கடைகளை அகற்ற, கலெக்டர், நெடுஞ்சாலை துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. நேற்று, ஓமலுார் நெடுஞ்சாலைத்துறை உதவி இயக்குனர் மணிவண்ணன் தலைமையில் குழுவினர், ஆக்கிரமிப்பு கடைகள், வீடுகள் என, 14 கட்டடங்களை இடித்து அகற்றினர். மேட்டூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
ரூ.33 லட்சத்துக்கு பருத்தி ஏலம்
வாழப்பாடி, ஆக. 11--
சேலம் மாவட்டம், வாழப்பாடி வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் பருத்தி ஏலம் நேற்று நடந்தது. ஏராளமான விவசாயிகள் பருத்தியை கொண்டு வந்தனர். குவிண்டால், ஆர்.சி.எச்., ரகம், 9,899 முதல், 11 ஆயிரத்து, 666 ரூபாய்; டி.சி.எச்., ரகம், 9,279 முதல், 12 ஆயிரத்து, 66 ரூபாய்; கொட்டு ரகம், 5,509 முதல், 7,901 ரூபாய் வரை விலைபோனது. 830 மூட்டைகள் மூலம், 33 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் சேலம் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X