போதிய பஸ் வசதியில்லாததால் பரிதாபம்: சரக்கு வாகனத்தில் பள்ளி சென்ற மாணவி பலி
Added : ஆக 11, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 

கொல்லிமலை பகுதியில் இருந்து, நேற்று முன்தினம் சரக்கு வாகனத்தில் பள்ளிக்கு செல்லும் போது தவறி விழுந்து படுகாயம் அடைந்த, பிளஸ் 1 மாணவி, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில், நேற்று முன்தினம், சித்துார் நாடு பஞ்., நரியங்காடு பகுதியைச் சேர்ந்த டிரைவர் பிரகாஷ், 35, என்பவர் சரக்கு ஆட்டோ ஓட்டி வந்துள்ளார். அப்போது, பள்ளி செல்ல பஸ்சில் இடம் இல்லாமல் ரோட்டில் நின்றிருந்த, முள்ளுக்குறிச்சியில் உறைவிட பெண்கள் மேல்நிலைப்பள்ளி பிளஸ் 1 படிக்கும் மாணவியர், 10க்கும் மேற்பட்டோர் சரக்கு
ஆட்டோவில் ஏறி சென்றனர்.

சரக்கு ஆட்டோ கீழ் பூசணிக்காடு என்ற இடத்தில் கொண்டை ஊசி வளைவில் திரும்பும்போது, ஆட்டோவில் இருந்த பிளஸ் 1 மாணவியர் அகிலா, 17, ரூபிகா, 16, ஆகிய, இருவரும், தவறி ரோட்டில் விழுந்தனர். இதில் பலத்த காயம் அடைந்த அகிலா, உயிருக்கு ஆபத்தான நிலையில், சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி, அகிலா நேற்று இறந்தார். இதுகுறித்து செங்கரை போலீசார் வழக்குப் பதிவு செய்து
விசாரிக்கின்றனர். போதிய பஸ் வசதி இல்லாததால், பள்ளி சென்ற மாணவியர் சரக்கு ஆட்டோவில் செல்லும் அவலம் நீடிக்கிறது. அது தற்போது உயிர் பலி வாங்கியுள்ளது. இனியாவது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் போதிய பஸ் வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் சேலம் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X