அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சைக்கிள் பிட்டிங் செய்யும் பணி தீவிரம் | கள்ளக்குறிச்சி செய்திகள் | Dinamalar
அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சைக்கிள் பிட்டிங் செய்யும் பணி தீவிரம்
Added : ஆக 11, 2022 | |
Advertisement
 
Latest district News

கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இலவச சைக்கிள் பிட்டிங் செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.



அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் இடை நிற்றலைத் தவிர்க்கவும், மேற்படிப்பு பயில ஊக்குவிக்கும் விதமாகவும் தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வருகிறது.அதன்படி, ஆண்டுதோறும் பத்தாம் வகுப்பு முடித்து, பிளஸ் 1 பயிலும் மாணவ, மாணவிகளுக்கு அரசு இலவச சைக்கிள் வழங்குகிறது. இந்த கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் பிளஸ் 1 பயிலும் மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்குவதற்காக சத்தீஸ்கர் மாநிலத்தில் இருந்து உதிரி பாகங்கள் லாரி மூலம் கொண்டு வரப்பட்டு கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இறக்கி வைக்கப்பட்டுள்ளது.

இந்த உதிரி பாங்களை பொறுத்தி, தயாரான சைக்கிள்கள், அருகில் உள்ள அரசு பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இன்னும் ஒரு சில மாதங்களில் சைக்கிள் வழங்கும் பணி தொடங்க உள்ளதால் சைக்கிள் பிட்டிங் செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X