ஓரங்கட்டப்பட்ட சுற்றுலா படகுமக்கள் பணம் ரூ. 80 லட்சம் வீண் | திருநெல்வேலி செய்திகள் | Dinamalar
ஓரங்கட்டப்பட்ட சுற்றுலா படகுமக்கள் பணம் ரூ. 80 லட்சம் வீண்
Added : ஆக 11, 2022 | |
Advertisement
 
Latest district News

திருநெல்வேலி:மணிமுத்தாறு அணையில் சுற்றுலா பயணிகளுக்காக ரூ 80 லட்சம் செலவில் வாங்கப்பட்ட சூரிய சக்தி சுற்றுலாப் படகு வீணாக பயன்பாடின்றி கிடக்கிறது.தமிழக அரசு 2019ல் திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறு அணையில் சுற்றுலா பயணிகளை கவர சூரிய ஒளியில் இயங்கும் 450 வோல்ட் திறன் கொண்ட சோலார் படகு திட்டத்தை அறிமுகப்படுத்தியது.


2020 ஜனவரியில் களக்காடு -முண்டந்துறை புலிகள் காப்பக துணை இயக்குனர் ஓம்காரம் கொம்மு துவக்கி வைத்தார். 24 பேர் பயணிக்க கூடிய சோலார் படகு தினமும் 8 முறை இயக்கப்பட்டது. பெரியவர்களுக்கு ரூ.110 கட்டணமும் சிறியோர்களுக்கு ரூ .55 கட்டணமும் வசூலிக்கப்பட்டது. தினமும் குறைந்தது ரூ .15 ஆயிரம் முதல் ரூ. 20 ஆயிரம் வரை வனத்துறைக்கு வருமானம் கிடைத்தது.
மணிமுத்தாறு அணைக்கட்டு, பூங்கா, அருவி என சுற்றுலா பயணிகள் வருகையும் அதிகரித்தது.சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பால் மரக்கடத்தல், விலங்குகள் வேட்டைக்கு சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில் அருவியில் வெள்ளப்பெருக்கு, மலைச்சாலை பராமரிப்பு நடக்கிறது எனவும் ஏதாவது காரணங்கள் கூறி பயணிகள் செல்வதற்கு வனத்துறையினர் தடை விதித்தனர்.

2020ல் சுற்றுலா படகு துவங்கிய ஒரு சில மாதங்களிலேயே வன அதிகாரிகள் அந்த திட்டத்திற்கு முழுக்கு போட்டனர். கடந்த 2 ஆண்டுகளாக படகின் சோலார் பேனல்கள் சேதமுற்று பராமரிப்பின்றி அணையில் ஓரம்கட்டப்பட்டுள்ளது.
இது குறித்து தற்போதைய புலிகள் காப்பக துணை இயக்குநர் செண்பகவள்ளி கூறுகையில், சுற்றுலா படகின் சோலார் பேனல்கள் அனைத்தும் சேதம் அடைந்து விட்டன. எனவே அதனை சரி செய்து தர அரசிடம் நிதி கேட்டுள்ளோம், என்றார். ரூ 80 லட்சத்தை வீணடித்து படகை ஓரம்கட்டிய வன அதிகாரிகள் மீது அரசு நடவடிக்கை எடுப்பதோடு மீண்டும் சுற்றுலா திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பதே பயணிகளின் கோரிக்கை.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் திருநெல்வேலி கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X