6 வயது சிறுமிக்கு தொல்லை தாயின் கள்ளக்காதலன் கைது | விழுப்புரம் செய்திகள் | Dinamalar
6 வயது சிறுமிக்கு தொல்லை தாயின் கள்ளக்காதலன் கைது
Added : ஆக 11, 2022 | |
Advertisement
 
Latest district News

மரக்காணம்:திண்டிவனம் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த, தாயின் கள்ளக்காதலனை, 'போக்சோ' சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.


விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த உப்பு வேலுாரைச் சேர்ந்த ஏழுமலை மகன் பிரேம்குமார், 20; திருமணம் ஆகாதவர். இவர், திருமணமான பெண்ணுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்தார்.ஆறு மாதத்திற்கும் மேலாக அப்பெண்ணின், 6 வயது சிறுமிக்கு பிரேம்குமார் பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
இதை அப்பெண்ணும் கண்டுகொள்ளாமல் இருந்துள்ளார்.இதையறிந்த பகுதி மக்கள், சிறுமியின் தந்தையிடம் தெரிவித்துள்ளனர். அவர், கோட்டக்குப்பம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் விசாரணை நடத்தி, பிரேம்குமார் மீது, 'போக்சோ' சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து, அவரை கைது செய்தனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X